வெள்ளை அடிக்க அல்ல; வீடு கட்ட வருகிறோம்!| Dinamalar

வெள்ளை அடிக்க அல்ல; வீடு கட்ட வருகிறோம்!

Updated : மார் 06, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (26) | |
நாம் தமிழர் கட்சியை துவங்கி, 11 ஆண்டுகளாக நடத்தி வருகிறார், சீமான். கூட்டணிக்கு அனைவரும் ஆலாய் பறக்கும் வேளையில், தனித்துப் போட்டி என, தைரியமாக முடிவெடுத்து, களம் கண்டு வருகிறார். இப்போதும், 234 தொகுதிகளில், சரி பாதியை பெண்களுக்கு வழங்கி, புதிய உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சீமான்.நம் நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:முருகனை வைத்து, நீங்கள் தான் பிரசாரம்
seeman, சீமான், நாம் தமிழர், ஸ்டாலின், முதல்வர்

நாம் தமிழர் கட்சியை துவங்கி, 11 ஆண்டுகளாக நடத்தி வருகிறார், சீமான். கூட்டணிக்கு அனைவரும் ஆலாய் பறக்கும் வேளையில், தனித்துப் போட்டி என, தைரியமாக முடிவெடுத்து, களம் கண்டு வருகிறார். இப்போதும், 234 தொகுதிகளில், சரி பாதியை பெண்களுக்கு வழங்கி, புதிய உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சீமான்.

நம் நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:முருகனை வைத்து, நீங்கள் தான் பிரசாரம் துவங்கினீர்கள். தைப் பூசத்துக்கு அரசு விடுமுறை விட வேண்டும் என, முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தீர்கள். ஆனால், வேல் யாத்திரை துவங்கி, அதே முருகனை வைத்து, பா.ஜ., தலைவர் எல்.முருகன் பரபரப்பை கிளப்பி, வெற்றி அடைந்து விட்டாரே?முருகனை, நாங்கள் எடுத்தது, அரசியல் அல்ல. எங்கள் இறையை, நாங்கள் மீட்க வேண்டும்; மறைக்கப்படுகிறது. பன்நெடுங்காலமாக நிராகரிக்கப்படுகிறது என்பதால், உளப்பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் செய்தோம். இதன் எழுச்சியைப் பார்த்த பின்,பலரும் அதை தொடர்ந்தனர்.தெலுங்கர் வைகோ என்பதில் துவங்கி, ஏதாவது ஒரு தலைவரை கடுமையாக விமர்சித்து, பரபரப்பை உண்டு பண்ணுவீர்கள். சமீபத்தில், அப்படி ஏதும் பரபரப்பு இல்லையே?


தெலுங்கர், மலையாளி என, யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இது, எங்கள் தாய் நிலம்; வாழும் உரிமை யாருக்கும் உண்டு; ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு என்கிறோம். வந்தவரை வாழ வைப்போம். ஆனால், சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம் என்பதே, எங்கள் கோட்பாடு. மொழி வழியாக நிலங்களும், இனங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அப்படி எங்களுக்கு இருப்பது ஒரு நிலம். அதில் வேற்று மொழிக்காரர் ஆள நினைப்பதை எதிர்க்கிறோம். அவ்வளவு தான்.ஆனால் உங்கள் பேச்சால் தாங்கள் காயப்படுவதாக சில தலைவர்கள் கருதுகிறார்களே?


நான் இப்படி பேசுவதால், சம்பந்தப்பட்ட நபர்கள் சீமான் என்னை கன்னடராக பார்க்கிறார், தெலுங்கராக பார்க்கிறார், மலையாளியாக பார்க்கிறார் என நினைத்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும், சொல்லுங்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் நான் விமர்சிப்பது இல்லை.


latest tamil news


'ஊழலுக்காக சிறை சென்றவர் சசிகலா' என, விமர்சித்த நீங்கள், அவர் வெளியே வந்ததும், முதல் ஆளாக போய் பார்த்தீர்களே?


விமர்சனத்துக்கும் சந்திப்புக்கும் சம்பந்தம் இல்லை. இங்கே நாகரிகம் அற்ற அரசியல் தீண்டாமை, திராவிடக் கட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ஹிந்து பையன், முஸ்லிம் பெண்ணையும், முஸ்லிம் பையன்,ஹிந்து பெண்ணையும் திருமணம் செய்து வாழ முடியும். ஆனால், அ.தி.மு.க., காரரின் மகன், தி.மு.க.,காரரின் மகளை மணமுடிக்க முடியாது. இது அநாகரிகம் அல்லவா. நான்கு ஆண்டு சிறையில் இருந்துள்ளார். உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். குடும்ப அளவில் எங்களுக்கு உறவு இருக்கிறது. ஆகவே, நலம் விசாரித்தேன். 'கருணாநிதி, என் இனத்துக்கு துரோகம் செய்து விட்டார்' என, தற்போதும் பேசுகிறேன். ஆனால், அவர் மருத்துவமனையில் இருக்கும்போது சென்று பார்த்தேன். இது என் அரசியல் நாகரிகம்.இந்த தேர்தலில், 117 தொகுதிகளில் ஆணுக்கும், 117 தொகுதிகளில் பெண்ணுக்கும் சம வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். இந்த சாதனைக்கு என்ன பின்னணி?


பரமசிவன், தன் உடலில் பாதியை, உமாதேவிக்கு கொடுத்தார் என்கிறோம். ஆணும், பெண்ணும் சமம் என்கிறபோது, ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொள்வதில் சாதனை என்ன வேண்டிக் கிடக்கிறது. என் அக்காவுடன், என் அம்மாவுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதில் என்ன பெருமை. ஆணுக்கு பெண் சமம் என்பது அல்ல எங்கள் கோட்பாடு. ஆணும், பெண்ணும் சமம் என்பதுதான். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புத்தி இருப்பவர்களுக்கு புரியும்.எம்.பி., - எம்.எல்.ஏ., ஆக முடியாத நிலையிலும், சளைக்காமல் போட்டியிடுகிறீர்களே?


ஒருவர், இருவர் பதவிக்கு வந்து என்ன செய்வது? அனைத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்பது என் இலக்கு. அதற்காக உழைக்கிறோம். வென்றாலும், தோற்றாலும் விடாமல் உழைப்பவனே போராளி, புரட்சிக்காரன்.விஜயகாந்தும் இப்படித்தான் உற்சாகமாக புறப்பட்டார். நீங்கள் இதே நிலையில், எத்தனை காலம் ஓடுவீர்கள்?


விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன், வைகோ எல்லாருமே தனியாக நின்றபோது கிடைத்த மக்கள் ஆதரவு, அவர்கள் கூட்டணிக்கு போனதும் குறைந்தது வரலாறு.அதோடு அவர்களின் தனித்துவம் போய் விட்டது. திராவிடக் கட்சிகள், அவர்களை ஆழி அலை போல அரவணைத்து உள்ளிழுத்து, கரைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இது புரிகிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால், என்னால் பார்க்க முடிந்தது. எனவே தான், எவருடனும் கூட்டணி இல்லை என்று, முடிவு எடுத்தோம்.கமலோடு கூட்டணி அமைக்கப் போவதாக, செய்தி பரவியது ஏன்?


நண்பர் குமரவேல் வந்து பேசினார். அது சரி வராது; என்னை விட்டுவிடுங்கள் என்று சொல்லி விட்டேன். யாருடனும் கூட்டணி இல்லை என்பதால், கமலுடனும் கூட்டணி இல்லை.கட்சி நடத்த எக்கச்சக்கம் செலவு செய்ய வேண்டும். எப்படி சமாளிக்கிறீர்கள்?


மக்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம். இதுதான் உண்மை.இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்த கல்யாணசுந்தரம், ராஜிவ்காந்தி உள்ளிட்ட பலரும் விலகிவிட்டனர். இது பலவீனம் இல்லையா?


இரண்டு பேர் விலகி செல்வதால், ஒரு கட்சி பலவீனம் அடைந்து விடாது. அவர்கள் விலகிச் செல்லவில்லை. நாங்கள் தான் விலக்கினோம்.மேடைகளில் சிரிக்கவும், சிந்திக்கவும் பேசுகிறோம் என்ற பெயரில், நாகரிகக் குறைவான வார்த்தைகள் பயன்படுத்துவதாக, குற்றச்சாட்டு இருக்கிறதே?


நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் தான், கருத்து சொல்கிறோம். நீங்கள் சொல்வதில் உண்மை இல்லை. அநாகரிகமாக பேசியதாக, ஏதாவது ஒரு பேச்சை காட்டுங்கள்.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடப் போவதாக சொன்னீர்கள்; ஏதும் பின்னணி உண்டா?


தி.மு.க.,வுக்கு மாற்று, அ.தி.மு.க., இல்லை; அ.தி.மு.க.,வுக்கு மாற்று, தி.மு.க., இல்லை. இருவருக்கும் மாற்றாக நாங்கள் இருக்கிறோம் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவர்கள், திராவிடம் என்கிறார்கள், நாங்கள், தமிழ் தேசியம் என்கிறோம். எனவே, கொள்கை அளவில் மோதுவோம் என்ற, முடிவு தான்.


முதல்வரை அவ்வப்போது சந்திக்கிறீர்களே?


தமிழர்கள் என்ற உணர்வில் சந்தித்தோம். எதார்த்தத்தை எடுத்துரைத்தார். 'நிதி வளம் இல்லை. இருப்பதை வைத்து, என்ன செய்ய முடியுமோ, அதை செய்கிறேன்' என்றார். வெளிப்படையாக, நேர்மையாக அவர் சொன்னது, எனக்கு பிடித்தது. மக்கள் நலனுக்காக, சில கோரிக்கைகள் வைத்தேன்; அதை நிறைவேற்றி கொடுத்தார்.ஸ்டாலினும் மக்களிடம் மனு வாங்குகிறார்தானே?


ஆட்சிக்கு வந்து செய்வேன் என்கிறவர், ஆட்சிக்கு வந்ததும் மக்களிடம் மனு வாங்கி, தீர்வு காணலாமே. இப்போது, எதற்கு வாங்கி, பெட்டியில் போட்டு பூட்ட வேண்டும்? இத்தனை பிரச்னைகளும், 10 ஆண்டுகளில் தான் ஏற்பட்டதா; அதற்கு முன் இல்லையா? மக்களுக்கு பிரச்னையே இவர்கள் தான். இவர்களை சரி செய்துவிட்டால், பிரச்னைகள் தீர்ந்து விடும்.நீங்கள் மனு எதுவும் வாங்க மாட்டீர்களா?


கட்டடத்துக்கு, வெள்ளை அடிக்க வந்தவர்கள் அல்ல நாங்கள். அதை இடித்து விட்டு புதிதாக கட்டுவதற்கு காத்திருக்கிறோம். அதை எப்படிச் செய்வேன் என்பதை, விளக்கிச் சொல்ல எனக்கு நேரமில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X