தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

வெளியாட்களை களம் இறக்கும் துரைமுருகன்

Updated : மார் 06, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
காட்பாடி தொகுதியில் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருவதால், தனக்காக பணியாற்ற, பிற மாவட்ட, பிற தொகுதிகளில் இருந்து ஆட்களை களம் இறக்கியுள்ளார், தி.மு.க., பொதுச்செயலர் துரை முருகன்.'மண்ணின் மைந்தன் நான்' என்று கூறி, 'இந்த முறை எப்படியாவது ஜெயிக்க வையுங்கள்; எனக்காக இரண்டு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்' என, போகுமிடமெல்லாம் உருகி வரும் துரை, ஆங்காங்கே,

காட்பாடி தொகுதியில் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருவதால், தனக்காக பணியாற்ற, பிற மாவட்ட, பிற தொகுதிகளில் இருந்து ஆட்களை களம் இறக்கியுள்ளார், தி.மு.க., பொதுச்செயலர் துரை முருகன்.



latest tamil news


கட்சியில் அதிருப்தி; ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை

'மண்ணின் மைந்தன் நான்' என்று கூறி, 'இந்த முறை எப்படியாவது ஜெயிக்க வையுங்கள்; எனக்காக இரண்டு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்' என, போகுமிடமெல்லாம் உருகி வரும் துரை, ஆங்காங்கே, 'நான் கருணாநிதியின் நிழல், பதவிக்காக வந்தவன் அல்ல; போராளியாக வந்தவன்' என, வீர வசனமும் பேசி வந்தார்.ஆனாலும், கட்சியிலேயே எதிர்ப்பு நிலவுவதால், 'ரிஸ்க்' எடுக்க விரும்பாமல் உள்ளூரை சேர்ந்த நிர்வாகிகளோடு வேறு தொகுதி உ.பி.,க்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.


latest tamil news


காட்பாடி தொகுதியில் சேண்பாக்கம் பகுதி வருகிறது. இங்கு உள்ளூர் நிர்வாகிகளோடு வேலுார் தொகுதியை சேர்ந்தவர்கள் தேர்தல் பணி செய்து வருகின்றனர். இதனால் உள்ளடி வேலைகள் தடுக்கப்படும் என துரைமுருகன் எதிர்பார்க்கிறார்.ஆனால், மற்ற உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் புகைச்சல் புறப்பட்டுள்ளது. அவர்களை துரைமுருகன் சமாதானப்படுத்தி வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
06-மார்-202101:07:06 IST Report Abuse
unmaitamil இந்த தேர்தலில் இவர் தோற்பது நாட்டுக்கு மட்டுமல்ல, திருட்டு திமுகவுக்கும் நல்லது. நன்றிகெட்டவர். MGR,க்கே நம்பிக்கை துரோகம் செய்தவர்,
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
05-மார்-202120:02:28 IST Report Abuse
Nagarajan D பாடையில் போகும் வரை பதவி.... கேவலமாக இல்லையா இந்த கிழவனுக்கு....
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
05-மார்-202119:37:51 IST Report Abuse
mindum vasantham போன முறை தான் போட்டி இடுவது கடைசி முறை என்று கூறினார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X