தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறது பா.ஜ.,

Updated : மார் 06, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (106)
Share
Advertisement
கடந்த, 2016 தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்டது. அப்போது, அ.தி.மு.க., -- தி.மு.க., மக்கள் நல கூட்டணி, பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் இருந்தன. எனினும், பா.ஜ., ஆறு தொகுதிகளில், 22 சதவீத ஓட்டுகளும், 14 தொகுதிகளில், 10 சதவீத ஓட்டுகளும் பெற்றது. அது செய்த ஒரே தவறு, 181 இடங்களில் போட்டியிட்டது, அதனால், 2.8 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சி என்ற பெயர் கிடைத்தது.எல். முருகன் தலைமை ஏற்ற
bjp, பாஜ, உயர் வகுப்பு, வாய்ப்பு, சட்டசபை தேர்தல்

கடந்த, 2016 தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்டது. அப்போது, அ.தி.மு.க., -- தி.மு.க., மக்கள் நல கூட்டணி, பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் இருந்தன. எனினும், பா.ஜ., ஆறு தொகுதிகளில், 22 சதவீத ஓட்டுகளும், 14 தொகுதிகளில், 10 சதவீத ஓட்டுகளும் பெற்றது. அது செய்த ஒரே தவறு, 181 இடங்களில் போட்டியிட்டது, அதனால், 2.8 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சி என்ற பெயர் கிடைத்தது.

எல். முருகன் தலைமை ஏற்ற பிறகும், அவர் வேல் யாத்திரை சென்ற பின்பும், பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரித்து இருப்பதாகவே கள தகவல்கள் கூறுகின்றன. முக்கியமாக, கொங்கு மண்டலம், நாகை பகுதிகளில் அது, 25 சதவீத ஓட்டுகள் பெறும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், சரியான திட்டமிடலும் இல்லை; முறையான பிரசாரமும் செய்யவில்லை என்பதால், பா.ஜ.,வின் உண்மையான வலிமை வெளியே தெரியாமல் இருக்கிறது.

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின், பா.ஜ., தன்னை நிலைநிறுத்தும் பணியை செவ்வனே செய்திருக்கலாம்; தவறி விட்டது. தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் பல காலமாக ஹிந்து மக்களின் நம்பிக்கையைக் கொச்சைபடுத்துவதை பார்த்து மக்களுக்கே எரிச்சல் உண்டாகிறது. ஆனால், அதை சாதகமாக்கும் முயற்சியில் பா.ஜ., வெற்றி பெறவில்லை.

தமிழ்நாட்டில் வளர்வதற்கு, திராவிடம் கலந்த ஆன்மிகத்தை பா.ஜ., கையில் எடுத்திருக்கிறது. அதனால், முன் பின் முரணான கருத்துகள் அதன் தலைவர்கள் மூலம் வெளிவருகின்றன. ஊடகப் பிரிவு, சமூக ஊடக பிரிவு, தொழில்நுட்ப பிரிவு (IT Cell), அறிவுசார் பிரிவு ஆகியவை இருந்தாலும் மக்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்த அவை எதுவும் பெரிதாக முயற்சி செய்யவில்லை. 2019 லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், முனைப்பாக வேலை செய்திருக்க வேண்டும்; மாறாக ஒருங்கிணைக்கப்படாமல் செயல்படுகின்றனர்.

பா.ஜ., முன்னேறிய வகுப்பினரின் கட்சி என்ற பிம்பம் பரவலாக இருக்கிறது. குறிப்பாக பிராமணர்கள் ஆதிக்கம் உள்ள கட்சி என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிக்கப்பட்டுள்ளது. உயர் வகுப்பை சாராத முருகன் தலைவராக வந்தவுடன் இந்த பிம்பத்தை மாற்ற முயற்சி எடுத்தாலும் அதை அவர் மட்டுமே செய்ய முடியாது. மற்ற நிர்வாகிகள் இந்த விஷயத்தில் எந்த முன்னெடுப்பையும் செய்ததாக தெரியவில்லை.முதலில், 40 க்கு அதிகமான தொகுதிகளை கேட்டு, பின்னர், 18 வரை இறங்கி வர தயாராக இருப்பதாக சொல்லி, இப்போது வெற்றி வாய்ப்புள்ள, 8 முதல், 10 தொகுதிகள் தந்தால் சரி என்று பேச்சு நடப்பதாக செய்திகள் வருகின்றன. படிப்படியாக இறங்கும் இந்த பேரத்தை கட்சியின் துணை தலைவர்கள், பொதுச் செயலர்கள் வெற்றி பெறுவதற்கான முயற்சியாகவே மக்கள் பார்க்கின்றனர்.

பா.ஜ., தனித் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். அப்படி பெற்றால், கணிசமான அளவு பின்தங்கிய வகுப்பினரின் வாக்குகளை பெற முடியும். தமிழ்நாட்டு மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாக முன்னேற இது ஓர் உத்தியாக அமையும். அப்படி செய்தால் பா.ஜ., நிச்சயமாக வித்தியாசமான கட்சி என்று கூற முடியும்.


latest tamil newsஸ்ரீராம் சேஷாத்ரி
வலதுசாரி சிந்தனையாளர்

Advertisement
வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JIVAN - Cuddalore District,இந்தியா
10-மார்-202110:00:23 IST Report Abuse
JIVAN ஒன்னு மதத்தச்சொல்லி ஒட்டு வாங்க பாக்கணும் இல்ல ஜாதிய வச்சி ஓட்டுவாங்க பாக்கணும்னு எவ்வளவு அறிவார்ந்த ஆலோசனை.
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
08-மார்-202114:42:30 IST Report Abuse
Sivaraman இந்த கட்டுரை நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எழுத வேண்டும் திரு காமராஜ் மறைவுக்குப் பின் பெரும் தலைவர்கள் இல்லாத இந்த தேர்தலில் திரு கமல் துணையில் கட்சி வளர்ச்சி இரண்டு கழகங்களுக்கு ஒரு மாற்று என்ற நிலைக்கு கொண்டு சென்று தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்தை பெற்று இருக்கலாம்
Rate this:
Cancel
rameshkumar natarajan - kochi,இந்தியா
08-மார்-202110:38:55 IST Report Abuse
rameshkumar natarajan In this article, a line comes as Hindus are irritated of DMK and allied parties. This is not true. Dravidian Movement has brought social Liberalization in tamil nadu. If that was not there, many oppressed and depressed communities wouldn't have lived with respect and dignity. So, Hinuism cannot be united in Tamil Nadu, simply because, here eism is prominent not Religion
Rate this:
Raja - chennai,இந்தியா
10-மார்-202113:27:10 IST Report Abuse
Rajaஇவர் ஒரு வலது சாரி சிந்தனையாளர். இவரிடம் இதை தான் எதிர்பார்க்க முடியும். திமுகவின் சில செயல்கள் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். ஆனால் தமிழக மக்கள் வாக்களிக்கும் போது அதை எல்லாம் புறம்தள்ளி விடுவார்கள். ஏன் என்றால் திராவிட கட்சிகள் மாநிலத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை பார்த்தே வாக்களிக்கிறார்கள். அதனால் தான் இவர்களது மத விளையாட்டுக்குள் தமிழக மக்கள் சிக்கவில்லை. ஒரு கட்சியின் மத கொள்கை மக்களை காப்பாற்றாது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த புரிதல் இருக்கும் வரை இவர்கள் பாடு திண்டாட்டம் தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X