தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

சொல்லணும் 'கோடி': சொல்லாவிட்டால் கடைக்கோடி

Updated : மார் 06, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.கடந்த மாதம் கட்சி தலைமை அலுவலகத்தில் இதற்கென தனி கவுன்டர் திறக்கப்பட்டு வசூல் துவங்கியது.விருப்ப மனுவுக்கு கட்டணமாக, 1,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஒன்பதாயிரம் விண்ணப்பங்கள் விற்பனையானது. தலா 25 ஆயிரம் ரூபாய் விருப்ப மனு சமர்ப்பிப்பு கட்டணம் செலுத்தியவர்களிடம் விண்ணப்பங்கள்
திமுக, நேர்காணல், கோடி, கடைக்கோடி

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.கடந்த மாதம் கட்சி தலைமை அலுவலகத்தில் இதற்கென தனி கவுன்டர் திறக்கப்பட்டு வசூல் துவங்கியது.

விருப்ப மனுவுக்கு கட்டணமாக, 1,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஒன்பதாயிரம் விண்ணப்பங்கள் விற்பனையானது. தலா 25 ஆயிரம் ரூபாய் விருப்ப மனு சமர்ப்பிப்பு கட்டணம் செலுத்தியவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவ்வகையில், 8,000 மனுக்கள் பெறப்பட்டன.கடந்த, 2ம் தேதி முதல் கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் தேர்வுக் குழு முன்னிலையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் துவங்கியது. மாவட்ட வாரியாக தினமும், 1,000 பேர் வரை இதில் பங்கேற்றனர்.

நேர்காணல் வழக்கமான சம்பிரதாயங்கள் அடிப்படையில் துவங்கியது. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டோர் தனித்தனியாக அழைத்து பெயர் விவரம், கட்சி உறுப்பினர், கட்சிப் பணி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டது. கடைசி கேள்வியாக பிரசாரம், செலவு செய்ய திட்டமிட்டுள்ள தொகை குறித்து கேட்கப்பட்டது. பின், கொத்து, கொத்தாக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அமர வைக்க கூட இடமின்றி நேர்காணலில் பங்கேற்றனர். இதில் கேட்கப்பட்ட ஒரே கேள்வி, 'எவ்வளவு செலவு செய்ய முடியும்' என்பது தான்.


திமுக நேர்காணல் கதை இது

latest tamil news

இதில் பலரும், 10 கோடி, 12 கோடி என, 'அளந்து' விட்டனர். ஓரிருவர் மட்டும் லட்சங்கள் என குறிப்பிட்டுள்ளனர். 12 முதல் 15 கோடி வரை செலவிட தயார் என்ற நிலையில் உள்ளோர் பெயர் மட்டுமே அடுத்த கட்ட பரிசீலனைக்கு செல்ல உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RG RG - Chennai,யூ.எஸ்.ஏ
05-மார்-202122:01:27 IST Report Abuse
RG RG எது 12 -15 கோடி யா ... இவங்கள பாத்தா ரொம்ப ஏழைங்களா தெரியுதே .. வாங்க ஏழைங்களா உக்காருங்க ஏழைங்களா.. அப்பறோம் ஒரு கேள்வி எப்பிடி இவளை அமௌன்ட் சம்பாதிச்சேறீங்க - அத மட்டும் கொஞ்சம் சொன்னீங்கன்னா நாங்களும் லைப் ல செட்டில் ஆயிடுவோம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-மார்-202117:35:44 IST Report Abuse
J.V. Iyer நானும் எவ்வளவு வேணுமானாலும் செலவு செய்வேன். ஆனால் நீங்கள் பணம் கொடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
05-மார்-202116:37:25 IST Report Abuse
ShivRam ShivShyam கோடிகளில் மிதக்கும் கேடுகள் நிறைந்ததே தீயமுக என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமோ ??
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
05-மார்-202116:45:11 IST Report Abuse
ShivRam ShivShyamகேடிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X