பொது செய்தி

இந்தியா

ஆளுமை மிக்க பெண் தலைவராக கவர்னர் தமிழிசை தேர்வு

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
புதுச்சேரி: இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கான விருதுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி கவர்னர் மாளிகை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு இட முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் உலக அளவில்
Governor,Tamilisai Soundararajan,Award, தமிழிசை சவுந்தரராஜன் கவர்னர், பெண்கள், விருது

புதுச்சேரி: இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கான விருதுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி கவர்னர் மாளிகை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு இட முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் உலக அளவில் ஆளுமையிலும், மக்கள் சேவையிலும் சிறந்து விளங்கும் முன்னணி பெண் தலைவர்களை தேர்ந்தெடுத்து வருகிற 7-ம் தேதி சிகாகோ இலியானாஸ் நகரில் நடைபெறும் 9வது ஆண்டு மகளிர் தின விழாவில் அமெரிக்க எம்.பி. டேனி கே.டேவிஸ் காணொலி காட்சி மூலம் விருதுகளை வழங்குகிறார்.


latest tamil news


இவ்விழாவில் இந்தியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனாவுக்கு பின் வருங்கால உலக சீரமைப்பில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த வருடம் விருது வழங்கப்பட இருக்கின்றது.
முதல் விருது அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்க்கும், 2வது விருது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் வழங்க உள்ளனர். மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மொத்தம் 20 பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-மார்-202123:29:29 IST Report Abuse
தமிழவேல் ஆசிரியர் அவர்களே.. ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா எப்படி ""தனது கமெண்ட்ஸ்களுக்கு"" இவ்வளவு ஸ்டார்கள் குத்திக்கொள்ள முடிகின்றது ? அதுபோல எனது கமெண்ட்ஸ்களுக்கு இவ்வளவு மோசம் என்ற ஸ்டார்கள் குத்துகின்றார் ? நன்றி.
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
06-மார்-202114:36:19 IST Report Abuse
ShivRam ShivShyamகேட்ட கேள்விக்கு பதில் தெரியலேன்னா ஸ்டார் குத்தறார் .. சூப்பர் ஸ்டார் குத்தறார்னுட்டு .. சூப்பர்ஸ்டார் தான் குதி உக்கார வெச்சிட்டீங்களே ..அப்புறம் என்ன...
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
05-மார்-202122:55:58 IST Report Abuse
Tamilan எடுபிடிகளுக்கும் டப்பாங்குத்து அல்லது தலையாட்டி பொம்மைகளுக்கும் , சும்மா உட்கார்ந்து சேரை தேய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கும் மட்டுமே விருதுகள் கிடைக்கும் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
05-மார்-202120:37:23 IST Report Abuse
Venkataramanan Thiru வாழ்த்துக்கள் இருவருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X