கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்கள் அடங்கியது, கொங்கு மண்டலம். அது தங்கள், 'கோட்டை' என மீண்டும் நிரூபிக்க அ.தி.மு.க., தயாராகி வருகிறது.
'கொங்கு மண்டலம் அ.தி.மு.க., கோட்டை என்பதே பொய் பிம்பம். லோக்சபா தேர்தலில் அதை உடைத்து விட்டோம். சட்டசபை தேர்தலிலும் உடைப்போம்' என்கிறார் ஸ்டாலின்.அதற்காக, கூட்டணிக் கட்சிகளிடம் சொல்லிவிட்டு இங்கு பெரும்பான்மை தொகுதிகளில், தி.மு.க.,வே போட்டியிட திட்டமிட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில், 50 தொகுதிகளை பிடித்துவிட்டால், ஆட்சி அமைப்பதற்கான, 'மெஜாரிட்டி' பெறுவது சுலபம். மற்ற மாவட்டங்களில், தலா, மூன்று அல்லது நான்கு வந்தால் போதும். எனவே, அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சிகளுமே, கொங்கு மண்டலம் மீது, பெரும் அக்கறை காட்டுகின்றன.
அத்திக்கடவு திட்டம் செயல்பாடு, பயிர் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், தங்களுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும் என்று அ.தி.மு.க.,நம்புகிறது. 'இந்த முறை விட்டால், கொங்கு மண்டலத்தை மீண்டும் தி.மு.க., கைப்பற்றுவது சிரமம்' என்று தி.மு.க., 'கணக்கு' போடுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE