அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்வி, மருத்துவம் இலவசம்; பா.ம.க தேர்தல் அறிக்கை வெளியீடு

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இலவச கல்வி, இலவச மருத்துவம், பூரண மதுவிலக்கு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.தமிழகத்தில் ஏப்.,6-ம் தேதி நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் பா.ம.க ‛வளர்ச்சிமிகு தமிழகம் படைப்போம்' என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 5)
பாமக, தேர்தல்_அறிக்கை, ராமதாஸ்

சென்னை: பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இலவச கல்வி, இலவச மருத்துவம், பூரண மதுவிலக்கு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் ஏப்.,6-ம் தேதி நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் பா.ம.க ‛வளர்ச்சிமிகு தமிழகம் படைப்போம்' என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 5) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வெளியிட்டார். இதன் முதல் பிரதியை ஆங்கில செய்தியாளர் ஜூலி பெற்றுக்கொண்டார்.


அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளை வாங்கிக்கொண்ட பாமக, தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டு சுறுசுறுப்பை காட்டியுள்ளது. ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள். மழலையர் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இலவச கல்வி. தனியார் பள்ளி கட்டணத்தை அரசே செலுத்தும். இடைநிற்றலை தடுக்க நிதியுதவி. உயர்கல்விக்கடன் தள்ளுபடி. வெளிநாட்டில் படிக்க நிதியுதவி. பொறியியல் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு. மகப்பேறு கால நிதியுதவி 25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

latest tamil news





தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள்:


* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு
* சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை.
* விவசாயம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம்.
* தங்கம் மீதான இறக்குமதி வரி, பெட்ரோல், டீசல் மீதான விரியை குறைத்து, விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை.
* அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த இலவச கல்வி வழங்கப்படும்.
* வரும் கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி இலவசம்
* அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்.
* காவிரி - கோதாவரி இணைத்து விவசாயிகளின் கண்ணீர் துடைப்போம்.
* அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* மகளிருக்கான மகப்பேறு விடுப்புக்காலம் தற்போதுள்ள 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்படும்.
* தமிழகத்தின் அனைத்து ஊர்களுக்கும் பேருந்து சேவை வசதி உறுதி செய்யப்படும்.
* மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
* அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு தூய்மையான குடிநீர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-மார்-202118:11:23 IST Report Abuse
Malick Raja தீயினால் சுட்டபுண் ஆறும் .. ஆறாதே நாவினால் சுட்டவடு . அய்யா ..பெரியய்யா ..சின்னையா .. நீங்கள் இருவரும் சேர்ந்து காரி உமிழ்த காணொளிகள் வளம் வரும் .. மானங்கெட்டவர்கள் என்று ஒருமையில் ஈபிஎஸ் ..ஓபிஎஸ்ஸை சாடிய காணொளி வரும் .. அப்போ நீங்க ரெண்டுபேரும் எஸ்கேப் .. எப்பூடி
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
05-மார்-202120:25:03 IST Report Abuse
Ramesh Sargam இப்படி இலவசங்களை கொடுத்தே மக்களை எவ்வளவு நாட்கள் ஏமாற்றிக்கொண்டிருப்பீர்கள்? இலவசம், தள்ளுபடி, etc. etc. இப்படி அறிவித்து மக்களை ஏமாற்றுவதும் ஒரு பொழப்பா...?
Rate this:
Cancel
05-மார்-202119:52:55 IST Report Abuse
theruvasagan அடேங்கப்பா. கூட்டணியில ஒவ்வொரு கட்சியும் தங்களோட தனிப்பட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டா ஜெயிச்சபிறகு ஒரே சமயத்துல ஆளாளுக்கு ஒரு கவர்மென்டு நடத்துவாங்க போலிருக்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X