சென்னை: பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இலவச கல்வி, இலவச மருத்துவம், பூரண மதுவிலக்கு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் ஏப்.,6-ம் தேதி நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் பா.ம.க ‛வளர்ச்சிமிகு தமிழகம் படைப்போம்' என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 5) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வெளியிட்டார். இதன் முதல் பிரதியை ஆங்கில செய்தியாளர் ஜூலி பெற்றுக்கொண்டார்.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள்:
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு
* சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை.
* விவசாயம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம்.
* தங்கம் மீதான இறக்குமதி வரி, பெட்ரோல், டீசல் மீதான விரியை குறைத்து, விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை.
* அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த இலவச கல்வி வழங்கப்படும்.
* வரும் கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி இலவசம்
* அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்.
* காவிரி - கோதாவரி இணைத்து விவசாயிகளின் கண்ணீர் துடைப்போம்.
* அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* மகளிருக்கான மகப்பேறு விடுப்புக்காலம் தற்போதுள்ள 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்படும்.
* தமிழகத்தின் அனைத்து ஊர்களுக்கும் பேருந்து சேவை வசதி உறுதி செய்யப்படும்.
* மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
* அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு தூய்மையான குடிநீர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE