ரங்கசாமி போக மாட்டார் : வி.கே.சிங்| Dinamalar

'ரங்கசாமி போக மாட்டார்' : வி.கே.சிங்

Added : மார் 05, 2021 | |
பழநி : ''புதுச்சேரியில், பா.ஜ., கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற மாட்டார்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.பழநியில் நேற்று அவர் கூறியதாவது:நம் நாட்டில் குடும்ப கட்சியாக இருந்தால், அது ஊழல் கட்சியாக இருக்கும். தமிழகத்தில் தி.மு.க., குடும்ப கட்சியாக உள்ளது. குடும்ப கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி,
 'ரங்கசாமி போக மாட்டார்' : வி.கே.சிங்

பழநி : ''புதுச்சேரியில், பா.ஜ., கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற மாட்டார்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.

பழநியில் நேற்று அவர் கூறியதாவது:
நம் நாட்டில் குடும்ப கட்சியாக இருந்தால், அது ஊழல் கட்சியாக இருக்கும். தமிழகத்தில் தி.மு.க., குடும்ப கட்சியாக உள்ளது. குடும்ப கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி, மக்களின் நன்மைக்கான கூட்டணி. பழநி தொகுதியில், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ளது. பா.ஜ., அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும் விவசாயம், எரிவாயு, கழிப்பறைகள், முத்ரா கடன் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. புதுச்சேரியில், பா.ஜ., கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற மாட்டார். தேர்தலுக்கு பின், புதுச்சேரி முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X