புதுடில்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்த்து குரல் கொடுங்கள் என்று காங்கிரஸ் கட்சி ஆன்லைன் மூலம் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் வரியை குறைக்க வேண்டும், விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டும் என காங்., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் விலைவாசி உயர்வுக்கு எதிராகக் குரல்கொடுப்போம் என்று ஆன்லைன் மூலம் பிரசாரத்தைக் காங்கிரஸ் கட்சி துவங்கியுள்ளது. இதில் மக்கள் அனைவரும் பங்கேற்று விலைவாசி உயர்வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‛ பாஜக என்பது பர்டன்(சுமைஏற்றும்) ஜனதா கட்சி. நாட்டின் நலனுக்காக விரைவில் பா.ஜ.,வினர் கொள்ளைக்கு எதிராகப் பேசுவோம். வாருங்கள் எங்களுடன் இணையுங்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளது. காங்., எம்.பி., ராகுல், டுவிட்டரில் பதிவிட்டதாவது: விலைவாசி உயர்வு சாபம். மக்களை விலைவாசி உயர்வு எனும் துன்பத்தில் தள்ளி வரி வருவாயை ஈட்டுகிறது. நாட்டை அழிக்கும் செயலுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்,' என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் டுவிட்டர் பதிவு: விலைவாசி உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுங்கள். மோடி அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்து, பா.ஜ.,வின் கஜானாவை நிரப்புகிறது. இந்தியா இதற்குமேல் பொறுமையாக இருக்காது. இந்தியா கிளர்ந்தெழும், விலைவாசி உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE