பொது செய்தி

இந்தியா

ரிஷாப் பன்ட் சதம்; மீண்டது இந்திய அணி

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஆமதாபாத்: ரிஷாப் பன்ட் சதம் கைகொடுக்க, ஆமதாபாத் டெஸ்டில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. பின் எழுச்சி கண்ட இந்திய அணி, அடுத்த இரு டெஸ்டில் வெற்றி பெற்று 2-1 என, முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில்
INDvENG, Pant, India, Lead

ஆமதாபாத்: ரிஷாப் பன்ட் சதம் கைகொடுக்க, ஆமதாபாத் டெஸ்டில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. பின் எழுச்சி கண்ட இந்திய அணி, அடுத்த இரு டெஸ்டில் வெற்றி பெற்று 2-1 என, முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 24 ரன் எடுத்து, 181 ரன்கள் பின்தங்கி இருந்தது. ரோகித் (8), புஜாரா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news




பன்ட் சதம்


இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ரோகித், புஜாரா இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புஜாரா 17 ரன்னுக்கு அவுட்டானார். அடுத்து வந்த கோஹ்லி ஸ்டோக்ஸ் பந்தில் போக்சிடம் 'பிடி' கொடுத்து 'டக்' அவுட்டாகி, இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ரகானே 27 ரன்கள் எடுக்க, ரோகித் சர்மா 49 ரன்னுக்கு அவுட்டானார்.


latest tamil news



அடுத்து ரிஷாப் பன்ட், வாஷிங்டன் சுந்தர் இணைந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப் பன்ட் (101), டெஸ்ட் அரங்கில் 3வது சதம் அடித்து அவுட்டானார். இவருக்கு கைகொடுத்த வாஷிங்டன் சுந்தர், தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து, 89 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. வாஷிங்டன் சுந்தர் (60), அக்சர் படேல் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narasimhan - Manama,பஹ்ரைன்
05-மார்-202122:39:14 IST Report Abuse
Narasimhan கோஹ்லி ரஹானே புஜாரா ஒன்றும் பிரயோஜனம் இல்லை. அவர்கள் எத்தனை டெஸ்டில் பெயில் ஆனாலும் விளையாடிக்கொண்டு தான் இருப்பார்கள். இதுவே வாஷிங்டன் சுந்தரோ நடராஜனோ இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லையென்றால் தூக்கி எரிந்து விடுவார்கள்.
Rate this:
Cancel
05-மார்-202118:31:04 IST Report Abuse
G. P. Rajagopalan Raju ஆம். கில், ரஹானே, புஜாரா
Rate this:
Cancel
05-மார்-202117:37:28 IST Report Abuse
சந்திரசேகர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மானத்தை பின்வரிசை வீரர்கள் தான் காப்பாற்றுகின்றனர்
Rate this:
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
05-மார்-202119:57:59 IST Report Abuse
Nemam Natarajan PasupathyWait for a century from Ashwin also...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X