பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் பணம் பரிவர்த்தனைகள் கண்காணிப்பு: சத்யபிரதா சாகு

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்காக பல்வேறு
Tamilnadu, Election Commission, OnlineTransaction, தமிழகம், தேர்தல், ஆன்லைன், பரிவர்த்தனை, கண்காணிப்பு, சத்யபிரதா சாகு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, கண்காணித்து வருகிறது. மேலும், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் உள்பட எந்தவித இலவசமும் கொடுக்கப்படாதவாறு, பறக்கும் படைகளை ஏற்படுத்தி கண்காணிக்கிறது. இதற்காக வாகன சோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.


latest tamil news


இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது, ஆன்லைன் பண பரிமாற்ற செயலிகளான கூகுள் பே, போன் பே உள்பட பல்வேறு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தாத வங்கி கணக்கில் திடீர் பண பரிவர்த்தனை நடந்தால் தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் 2 பேர் மார்ச் 8-ம் தேதி தமிழகம் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
06-மார்-202107:59:13 IST Report Abuse
அம்பி ஐயர் இதெல்லாம் நம்ம அரசியல் வியாதிங்களுக்கு அல்வா மாதிரி. பணமாகவோ, பொருளாகவோத்தான் கொடுக்கக் கூடாது. கிஃப்ட் வவுச்சர் மாதிரி டோக்கன்களைக் கொடுத்திடறாங்க. அந்த வவுச்சர் அல்லது டோக்கனை எடுத்துண்டு போய் அந்த குறிப்பிட்ட கடைகள்ல போய் ஜவுளி, பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். சம்மந்தப்பட்ட அரசியல் வியாதிகளிடம் கொடுத்து மொத்தமாக கல்லா கட்டலாம்.... இதெல்லாம் நடைமுறைக்கு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மார்-202106:52:50 IST Report Abuse
தல புராணம் கூரைமேல ஏறி கோழி பிடிக்காதவன், வானத்திலே ஏறி வைகுண்டம் போவானாம்.. இங்கே ரோட்டுலே லாரி லாரியா ஆளும்கட்சிக்காரன் கொண்டு போறதை கண்டுக்க துப்பில்லே.. இன்டர்நெட்டிலே போறதை இவரு பிடிக்க போறாராக்கும்..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
05-மார்-202119:51:55 IST Report Abuse
Visu Iyer பண மதிப்பு இழப்புக்கு பிறகு கருப்பு பணம் ஒழிக்கப் பட்டு விட்டதே... பிறகு எப்படி தேர்தலுக்கு பணம் கொடுப்பார்கள்... குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஒரு அரசியல் கட்சி தலைவர்கள் அல்லது பிரமுகர்கள் கூட இந்த பண மதிப்பு இழப்பின் போ து மாட்டிக் கொள்ள வில்லை.. மறுபடியும் பணம் தருகிறார்கள் கருப்பு பணம் என்று சொன்னால்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மார்-202106:53:38 IST Report Abuse
தல புராணம்அது அந்தப் பைனஞ்சு லச்சம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X