ஆன்லைன் பணம் பரிவர்த்தனைகள் கண்காணிப்பு: சத்யபிரதா சாகு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் பணம் பரிவர்த்தனைகள் கண்காணிப்பு: சத்யபிரதா சாகு

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (4)
Share
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்காக பல்வேறு
Tamilnadu, Election Commission, OnlineTransaction, தமிழகம், தேர்தல், ஆன்லைன், பரிவர்த்தனை, கண்காணிப்பு, சத்யபிரதா சாகு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில், ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, கண்காணித்து வருகிறது. மேலும், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் உள்பட எந்தவித இலவசமும் கொடுக்கப்படாதவாறு, பறக்கும் படைகளை ஏற்படுத்தி கண்காணிக்கிறது. இதற்காக வாகன சோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.


latest tamil news


இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது, ஆன்லைன் பண பரிமாற்ற செயலிகளான கூகுள் பே, போன் பே உள்பட பல்வேறு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தாத வங்கி கணக்கில் திடீர் பண பரிவர்த்தனை நடந்தால் தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் 2 பேர் மார்ச் 8-ம் தேதி தமிழகம் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X