பொது செய்தி

இந்தியா

பருவநிலை மாற்ற பிரச்னைக்கு முக்கியத்துவம்: பிரதமர்

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதே, முக்கிய இலக்கு என, இந்தியா - சுவிடன் இடையிலான உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்,இந்தியா - சுவீடன் இடையிலான உச்சி மாநாடு வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி - சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோவென் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டில் மோடி பேசியதாவது: பருவநிலை
modi, india, sweden, climate change, narendra modi, pmmodi, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா, மோடி,

புதுடில்லி: பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதே, முக்கிய இலக்கு என, இந்தியா - சுவிடன் இடையிலான உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்,

இந்தியா - சுவீடன் இடையிலான உச்சி மாநாடு வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி - சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோவென் கலந்து கொண்டனர்.


latest tamil newsஇந்த மாநாட்டில் மோடி பேசியதாவது: பருவநிலை மாற்றம் விவகாரம் தான் இந்தியா , சுவீடன் நாடுகளுக்கு முக்கிய பிரச்னை. இதில், இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும். இயற்கையுடன் இணைந்து வாழ்வதே, இந்தியாவின் கலாசாரம். பாரீஸ் ஒப்பந்தத்தில், போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்த இலக்கை அடைவது மட்டுமல்லாமல், அதில் நாம் வெற்றி பெறுவோம். ஜி20 நாடுகளில், இந்தியா, தனது இலக்குகளை நன்கு அடைந்தள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை இந்தியா 162 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம், முதலீடு, ஸ்டார்ட் ஆப் ஆராய்ச்சி ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-மார்-202122:34:34 IST Report Abuse
ஆப்பு ஒரு நாலு ஐட்டம் வெச்சிருக்காரு. பயங்கரவாத அச்சுறுத்தல். ஏதோ ஒரு அந்நிய நாட்டுடன் எல்லைப் பிரச்சனை. கொரோனா அச்சுறுத்தல். நேரு காரணம். கடுக்காய் வைத்தியம். ஆத்மநிர்பரா... இன்னும் 100 வருஷம் ஒப்பேத்தலாம். பஹூத் அச்சா ஹைன்.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
05-மார்-202120:39:32 IST Report Abuse
Sivagiri அடேங்கப்பா . . . ஒரு பக்கம் உலக அளவில் பேசுறாரு . . . ஒரு பக்கம் வாழை நார் கூடையை பத்தி பேசுறாரு . . . ஒரு பக்கம் மாணவர்கள் பரீட்சை பத்தி பேசுறாரு . . . ஒரு பக்கம் திமுக பத்தி பேசுறாரு . . . காங்கிரஸ் பத்தி பேசுறாரு . . . கழிப்பறை கட்டணும்னு சொல்றாரு . . . வணக்கம் தமிழ் / திருவள்ளுவர் - னு பேசுறாரு . . . அங்கிட்டு போயி சமஸ்க்ரிதம் பேசுறாரு . . . நம்மளுக்குத்தான் ஒரு எழவும் புரிஞ்சு தொலைக்க மாட்டேங்குது . . .
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
05-மார்-202122:10:49 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஒரு எளிமையான விஷயம். வெறுப்புணர்வுடன் ஒருவர் பேச்சைக் கேட்கும்போது புரியாது...
Rate this:
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
06-மார்-202105:16:07 IST Report Abuse
Yezdi K Damoஇதுக்கே அசந்துட்டா எப்படி . கைவசம் இன்னும் நிறைய திறமைகள் அவர்கிட்ட இருக்கு . கணவன் ,மனைவி ,பிள்ளைப்பேறு அப்படின்னு ஆரம்பிச்சு புளுடோனியம் ,தோரியம் பயன்படுத்தி என்ன செய்யமுடியும் ,லிக்விட் மெர்குரி பயன்படுத்தி ராக்கெட் தயாரிச்சு செவ்வாய் கிரகத்தில் இறங்குவது எப்படி , ஹைட்ரஜன் எப்படி எரிபொருளாக மாற்ற முடியும் போன்ற சகல விஷயங்களையும் நம்ம எழுத்தாளர் பைரவன் புத்தகமாக எழுதினாலும் ஆச்சரியபடுவதுக்கு ஒன்றும் இல்லை ....
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
05-மார்-202118:34:16 IST Report Abuse
Nallavan Nallavan பசுங்குடில் வாயுக்களைக் கையாளுவது குறித்த விழிப்புணர்வு இந்திய, தனியார் எரிவாயு நிறுவனங்களுக்கு ஏற்படுத்த வேண்டும் .......... தீவிரமாகக் கண்காணிப்பதும் அவசியம் .......... இதுவரை எந்த அரசும் (உங்கள் அரசு உட்பட) இதை உருப்படியாகச் செய்யவில்லை ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X