வூஹான் கொரோனா பரவல் குறித்த தகவல்களை சீனா வெளியிடவேண்டும்-உலக சுகாதார அமைப்பு

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
உலக சுகாதார அமைப்பு கடந்த ஜனவரி மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் எவ்வாறு உலகுக்குப் பரவியது என்று சோதனை மேற்கொள்ளச் சென்றது. 14 நாட்கள் தனிமையில் இருந்த விஞ்ஞானிகள் பின்னர் பரிசோதனைக் கூடத்தில் வைரஸ் பரவல் குறித்து சீன விஞ்ஞானிகளிடம் தனித்தனியாக விசாரித்தனர். வவ்வால் பெண் (bat woman) என்று அழைக்கப்படும் வவ்வால்கள் குறித்து நீண்ட நாட்களாக

உலக சுகாதார அமைப்பு கடந்த ஜனவரி மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் எவ்வாறு உலகுக்குப் பரவியது என்று சோதனை மேற்கொள்ளச் சென்றது.



latest tamil news



14 நாட்கள் தனிமையில் இருந்த விஞ்ஞானிகள் பின்னர் பரிசோதனைக் கூடத்தில் வைரஸ் பரவல் குறித்து சீன விஞ்ஞானிகளிடம் தனித்தனியாக விசாரித்தனர். வவ்வால் பெண் (bat woman) என்று அழைக்கப்படும் வவ்வால்கள் குறித்து நீண்ட நாட்களாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் சீன பெண் விஞ்ஞானி ஒருவர் உட்பட பலரை உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் விசாரித்தனர்.

வூஹான் பரிசோதனை கூடம் மட்டும் அல்லாமல் இறைச்சி மார்க்கெட்டிலும் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது உலக சுகாதார அமைப்பின் இந்த விசாரணை முடிவை எட்டியுள்ளது. இதனை அடுத்து இந்த குழுவின் தலைவர் பீட்டர் பென்பார்க் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார். கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடத்தில் இருந்து எவ்வாறு பரவியது என்று என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் பேசினார்.


latest tamil news



பரிசோதனைக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் நகருக்குள் பரவுவதற்கு முன்னரே, அதாவது கடந்த 2019 டிசம்பர் மாதத்திற்கு முன் வைரஸ் தாக்கம் இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கு சீன அரசிடம் சில ஆதார தகவல்களும் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அவற்றை சீனா வெளியிட இருப்பதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக நலன் கருதி சீனா இந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும். அப்போதுதான் தங்களது இரண்டு மாத கால ஆய்வு முழுமைபெறும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
06-மார்-202111:53:34 IST Report Abuse
vnatarajan ஆதாரங்களை சீன வெளியிடவேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு விண்ணங்கள் கூறுவது சந்தேகமாக உள்ளது.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
05-மார்-202119:44:55 IST Report Abuse
A.George Alphonse இந்த குழு சீனாவுக்கு ஏன் நேரடியாக உத்திரவு இட்டு இந்த ஆதாரங்களை உடனே வெளியிட வேண்டும் என்று சொல்லக்கூடாது?இவனை கெஞ்சுவதால் அவன் மிஞ்சுவானே தவிர ஆதாரங்களை ஒருபோதும் வெளியிட மாட்டான்.சர்வதேச அளவில் இவனுக்கு அழுத்தம் தரவேண்டும்.இவன் உலகத்தையே அச்சுறுத்தும் சாத்தான்.இன்னும் எவ்வளவு உயிர்களை இந்த ரத்த காட்டேரி சாத்தான் பறிக்க காத்திருக்கிறானோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X