அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர் பட்டியல் வெளியான பின்பே தேர்தல் அறிக்கை : அ.தி.மு.க.,முடிவு

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிட்ட பின்னரே தேர்தல் அறிக்கை வெளியிட அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பு அடைந்துள்ளது.பிரதான கட்சிகள் தங்களுடைய கூட்டணிகட்சிகளுக்கான இடத்தை ஒதுக்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. வரும் 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி துவங்க இருப்பதால் அதற்குள்ளாக வேட்பாளர்

சென்னை: வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிட்ட பின்னரே தேர்தல் அறிக்கை வெளியிட அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.



latest tamil news



தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பு அடைந்துள்ளது.பிரதான கட்சிகள் தங்களுடைய கூட்டணிகட்சிகளுக்கான இடத்தை ஒதுக்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. வரும் 12ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி துவங்க இருப்பதால் அதற்குள்ளாக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிட பல்வேறு கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க., சார்பில் இன்று ( 05ம் தேதி) முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் முதல்வர் பழனிசாமி 5 வதுமுறையாக மீண்டும் எடப்பாடி தொகுதியிலும் , துணை முதல்வர் பன்னீர்செல்வம் 3 வது முறையாக போடிநாயக்கனூர் தொகுதியலும், மேலும் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், எஸ்.பி., சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் , நிலக்கோட்டை எம்எல் ஏ., தேன்மொழி அதே தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.


latest tamil news



இதனிடையே அ.தி.முக..வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தேர்தல் அறிக்கை தயார்செய்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் அறிக்கை வெளியிட அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-மார்-202106:11:11 IST Report Abuse
Mani . V ஆமா, பெரிய வளர்ச்சித் திட்டங்கள் இருக்கும் - அவர்களுக்கு.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
06-மார்-202102:32:24 IST Report Abuse
Matt P என்ன தான் தமிழ்நாட்டுக்கு முதல்வர்களாக வாழ்ந்து காட்டினாலும், வூர் பக்கம் போய் ஜாதி மக்களை நம்பி தான் தேர்தலில் நிற்க வேண்டியதாயிருக்கிறது.
Rate this:
Cancel
Krishnan - Bengaluru,இந்தியா
06-மார்-202101:39:02 IST Report Abuse
Krishnan தீ மூ க வினுடைய தேர்தல் அறிக்கைக்குப்பிறகே அண்ணா தீ மு கட்சியினுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடவேண்டும். அப்பொழுதுதான் தீ மு க வினுடைய இலவசத்தைவிட அதிகமான இலவசத்தை அண்ணா தி மு க அறிவிக்கமுடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X