தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மறைவு: நெல்லை, - தூத்துக்குடி தென்காசி பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மறைவு: நெல்லை, - தூத்துக்குடி தென்காசி பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021
Share
நெல்லை: தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மறைவை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி பத்திரிக்கையாளர் மன்ற அலுவலகத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.திருநெல்வேலிநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.திருநெல்வேலிநெல்லை: தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மறைவை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி பத்திரிக்கையாளர் மன்ற அலுவலகத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.latest tamil newsதிருநெல்வேலிநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தனார் பல்கலையில் தொடர்பியல் துறைக்கு தமது சொந்த செலவில் ரூபாய் ஒரு கோடியில் சகல வசதிகளுடன் இராமசுப்பையர் கிருஷ்ணமூர்த்தி ஊடகக் கட்டிடத்தையும் , டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நூலகத்தையும் கொடையாக வழங்கியுள்ளார். அன்னாரது மறைவிற்கு தொடர்பியல் துறையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் .முனைவர். கா.பிச்சுமணி மற்றும் பதிவாளர் பேராசிரியர். முனைவர்.ஆர். மருதகுட்டி, தொடர்பியல் துறைத்தலைவர் பேராசிரியர். ஜி.பாலசுப்பிரமணியராஜா ,பேராசிரியர்கள் ,ஊழியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி பத்திரிகையாளர்கள் மன்றத்தின் சார்பில் தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், உதவி மக்கள் தொடர்பு அலுவுலர் மகாகிருஷ்ணன், பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.


latest tamil news
தூத்துக்குடிதூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற அலுவலகத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், மூத்த பத்திரிக்கையாளர்கள் அருண், மகாராஜா, அன்னாத்துரை, ஆத்திமுத்து, மற்றும் முரளி கணேஷ், காதர் மொகைதீன், மாரிராஜா, ராஜா சிதம்பரம், பாலமுருகன், சாதிக், வள்ளிராஜ் உள்ளிட்ட பத்திரிக்கையாளர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தென்காசி


தென்காசி மாவட்ட தலைமை ஊடகம் மற்றும் பத்திரிகை யாளர்கள் சங்கம் சார்பில் மறைந்த தினமலர் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாலை முரசு செய்தி வாசிப்பாளர் கோபிநாதன் இவர்களுடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி மலர் தூவிமரியாதை செலுத்தப்பட்டது. இதில் சங்கத்தலைவர் k.m.k.இசக்கி ராஜன் துணைத்தலைவர் கணேஷ்குமார் செயலாளர் செந்தில் துணை செயலாளர் முப்பிடாதி பொருளாளர் ஏஜிஎம். கணேசன் கௌரவத் தலைவர் முருகன் கவுரவ ஆலோசகர்அலெக்ஸ் செயற்குழு உறுப்பினர்கள் ராஜன் இசக்கிராஜ் சம்பத் நாகராஜ் தங்கராஜ் உறுப்பினர்கள் ராஜா பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X