பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மார் 05, 2021
Share
Advertisement
மார்ச், 6, 1938 கர்நாடகா மாநிலம், பெங்களூரில், 1938 மார்ச், 6ல் பிறந்தவர், சி.வி.விஸ்வேஸ்வரா. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலையில், அணுத்துகள் இயற்பியல் துறையில், முதுகலை பட்டம் பெற்றார். மேரிலேண்ட் பல்கலையில், கருந்துளை பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.நியூயார்க், பாஸ்டன், பிட்ஸ்பர்க் பல்கலைகளில், பேராசிரியராக பணி செய்தார். பின், பெங்களூரு திரும்பிய அவர்,


இதே நாளில் அன்று


மார்ச், 6, 1938



கர்நாடகா மாநிலம், பெங்களூரில், 1938 மார்ச், 6ல் பிறந்தவர், சி.வி.விஸ்வேஸ்வரா. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலையில், அணுத்துகள் இயற்பியல் துறையில், முதுகலை பட்டம் பெற்றார். மேரிலேண்ட் பல்கலையில், கருந்துளை பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.நியூயார்க், பாஸ்டன், பிட்ஸ்பர்க் பல்கலைகளில், பேராசிரியராக பணி செய்தார். பின், பெங்களூரு திரும்பிய அவர், 1970ல், கருந்துளை வடிவம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஐன்ஸ்டீன் கருந்துளைகள் பற்றி சில நுால்களும் பல கட்டுரைகளும் எழுதினார்.பெங்களூரில் கோளரங்கத்தை தோற்றுவித்து, அதன் இயக்குனராக இருந்தார். இரண்டு அறிவியல் குறும்படங்களை உருவாக்கினார். விண்வெளி அறிவியல் குறித்து, பல்வேறு நுால்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். 2017 ஜன., 16ல், தன், 78வது வயதில் காலமானார்.
'இந்தியாவின் கருந்துளை மனிதர்' சி.வி.விஸ்வேஸ்வரா பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X