இந்தியாவில் வீணாகும் 7 கோடி டன் உணவு: ஐ.நா., அறிக்கை

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் அதன் கூட்டு நிறுவனம் இணைந்து எந்தளவு உணவு வீணாகிறது என்ற பட்டியலை வெளியிட்டது. அதில் 2019-ல் உலகளவில் 93 கோடி டன்கள் அளவிற்கு உணவு பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.வீணடிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் 61% வீடுகளிலிருந்தும், 26 சதவீதம் உணவு சேவை நிறுவனங்களாலும், 13% சில்லறை விற்பனையாலும் ஏற்பட்டுள்ளது.

ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் அதன் கூட்டு நிறுவனம் இணைந்து எந்தளவு உணவு வீணாகிறது என்ற பட்டியலை வெளியிட்டது. அதில் 2019-ல் உலகளவில் 93 கோடி டன்கள் அளவிற்கு உணவு பொருட்கள் வீணடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.



latest tamil news



வீணடிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் 61% வீடுகளிலிருந்தும், 26 சதவீதம் உணவு சேவை நிறுவனங்களாலும், 13% சில்லறை விற்பனையாலும் ஏற்பட்டுள்ளது. வீணடிக்கப்பட்ட உணவுகளின் அளவு, மொத்த உலக உணவு உற்பத்தியில் 17% வரை இருக்கக் கூடும் என்கின்றனர். வீணான இந்த உணவு பொருட்களை லாரிகளில் ஏற்ற வேண்டுமானால் 40 டன் கொள்ளளவு கொண்ட 2.3 கோடி லாரிகள் தேவைப்படும். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தினால் உலகையே 7 வட்டமடிக்கலாம் என ஐ.நா., அமைப்பு கூறுகிறது.

மேலும், ஐ.நா., அறிக்கையின் படி, இந்திய வீடுகளில் வீணாகும் உணவின் அளவு ஆண்டுக்கு 6.8 கோடி டன்கள் ஆகும். இது அமெரிக்காவில் ஆண்டுக்கு 1.9 கோடி டன்கள், சீனாவில் 9.1 கோடி டன்களாக உள்ளது. ஓட்டல்கள் போன்ற உணவு சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிலையங்களில் முறையே 5% மற்றும் 2% வீணடிக்கின்றன. பருவநிலை மாற்றம், இயற்கை, பல்லுயிர் அழிவு, சூழல் மாசு போன்ற பிரச்னைகளை சமாளிக்க உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், குடிமக்கள், தொழில் நிறுவனங்கள் உணவு வீணாவதை குறைக்க தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வளவு உணவு வீணடிக்கப்பட்ட அதே 2019-ல் உலகம் முழுவதும் 69 கோடி மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news





உணவு வீணாகாமல் தடுப்பது எப்படி



கொரோனா பாதிப்பால் இந்த எண்ணிக்கை 2020-ல் உயர்ந்திருக்கும் என்கின்றனர். மேலும் 300 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே வீடுகளில் உணவு வீணாவதை குறைக்க உதவி தேவை என்று ஐ.நா., கூறுகிறது. உணவு வீணாவதை குறைப்பதன் மூலம் பசுமை இல்ல வாயுக்களை குறைக்கலாம், மாசுபாட்டை குறைக்கலாம், இயற்கை அழிவது குறையும், பட்டினி குறையும், பணம் மிச்சமாகும் என்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinoth - Hyderabad,இந்தியா
06-மார்-202110:31:59 IST Report Abuse
Vinoth இந்த கணக்குப்படி பார்த்தால், ஒவ்வொரு இந்தியனும்- குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை-ஆளுக்கு சுமார் 54 கிலோ உணவை கடந்த வருடம் வீணடித்துள்ளனர் என்று சொல்லவருகிறார்கள். இந்த புள்ளிவிவரத்தை உண்மை என்று நம்பி நிறையபேர் சுயமாக இந்தியர்களை திட்டி கருது பதிவிடுகிறார்கள். வீணாக்குகிறார்கள் , அதில் சந்தேகமில்லை, ஆனால் இந்த கணக்கெல்லாம் கொஞ்சம் ஓவர்.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
06-மார்-202109:03:48 IST Report Abuse
Darmavan வீணாகும் உணவை வாங்கி ஏழைகளுக்கு கொடுக்கும் வேலையை தொண்டு நிறுவனங்கள் என் செய்யக்கூடாது.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
06-மார்-202112:21:56 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஅதை நீங்களேன் செய்யக்கூடாது? உங்களால் முடிந்த அளவுக்கு ஒருவனின் ஒருவேளை உணவு தேவையை தீர்க்கலாமே?...
Rate this:
Cancel
Vinoth - Hyderabad,இந்தியா
06-மார்-202108:31:26 IST Report Abuse
Vinoth சுத்த அபத்தம். சில நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, அங்கு வருபவர்கள் வீணாக்கும் உணவை கணக்கெடுத்து அதை மக்கள்தொகையில் பெருக்கி இந்த அரிய கண்டுபிடிப்பை செய்திருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X