புதுடில்லி:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறிய, நாடு முழுதும், 22 கோடி பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பரிசோதனைகள் தொடரும் நிலையில், கடந்த, 24 மணி நேரத்தில், 7.62 லட்சம் பேர் பரிசோதனைக்கு உள்ளாயினர். இதன் வாயிலாக, 16 ஆயிரத்து, 838 பேரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், இதுவரை வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 11 லட்சத்து, 73 ஆயிரத்து, 761 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து, ஒரு கோடியே, எட்டு லட்சத்து, 39 ஆயிரத்து, 894 பேர் குணம் அடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 97.01 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதிப்பிற்கான சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 1.76 லட்சமாக உள்ளது. இவர்களின் விகிதம், ஒட்டு மொத்த பாதிப்பில், 1.58 சதவீதமாக உள்ளது.
கொரோனாவால் கடந்த, 24 மணி நேரத்தில், மஹாராஷ்டிராவில், 60 பேர், பஞ்சாபில், 15; கேரளாவில், 14 பேர் உட்பட, 113 பேர் உயிரிழந்து உள்ளனர்.இதுவரையிலான கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 57 ஆயிரத்து, 548 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.41 சதவீதமாக இருக்கிறது.
வைரஸ் பலி எண்ணிக்கையில், 52 ஆயிரத்து, 340 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் தொடர்கிறது. தமிழகம், 12 ஆயிரத்து, 508 பேருடன், இரண்டாம் இடத்திலும், கர்நாடகா, 12 ஆயிரத்து, 350 பேருடன் அதற்கடுத்த இடத்திலும் உள்ளன.கொரோனா தொற்று கண்டறிய, நாடு முழுதும், 21 கோடியே, 99 லட்சத்து, 40 ஆயிரத்து, 742 பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளன.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE