நான்கு பேருடன் ஓடிய பெண் குலுக்கலில் கணவர்தேர்வு

Updated : மார் 06, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
லக்னோ:உத்தர பிரதேசத்தில், நான்கு பேருடன் வீட்டை விட்டு ஓடிய பெண், ஊரார் முன்னிலையில், குலுக்கல் வாயிலாக, ஒருவரை கணவராக்கிய விசித்திர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.காமெடி நடிகர் வடிவேலு நடித்த திரைப்படத்தில், ஒரு பெண்ணுக்கு, நான்கு ஆண்கள் சொந்தம் கொண்டாடுவது போன்ற ஒரு காட்சி, இடம் பெற்றிருக்கும். ஏட்டாக நடிக்கும் வடிவேலு, நான்கு பேரின் பெயர்களை எழுதி, சீட்டு குலுக்கிப்
 நான்கு பேருடன் ஓடிய பெண் குலுக்கலில் கணவர்தேர்வு

லக்னோ:உத்தர பிரதேசத்தில், நான்கு பேருடன் வீட்டை விட்டு ஓடிய பெண், ஊரார் முன்னிலையில், குலுக்கல் வாயிலாக, ஒருவரை கணவராக்கிய விசித்திர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

காமெடி நடிகர் வடிவேலு நடித்த திரைப்படத்தில், ஒரு பெண்ணுக்கு, நான்கு ஆண்கள் சொந்தம் கொண்டாடுவது போன்ற ஒரு காட்சி, இடம் பெற்றிருக்கும். ஏட்டாக நடிக்கும் வடிவேலு, நான்கு பேரின் பெயர்களை எழுதி, சீட்டு குலுக்கிப் போடுவார்.


புகார்


இது போன்ற ஒரு சம்பவம், உத்தர பிரதேசத்தில், உண்மையாகவே நடந்துள்ளது. இங்கு, லக்னோவைச் சேர்ந்த ஒரு இளம்பெண், சமீபத்தில், நான்கு நண்பர்களுடன் திடீரென வீட்டை விட்டு ஓடியுள்ளார்.இரவு முழுதும் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்த அந்த பெண், காலையில் ஊர் திரும்பினார். உடனே, மகளை கடத்திச் சென்ற நான்கு பேர் மீது, போலீசில் புகார் கொடுக்க, பெற்றோர் முடிவு செய்தனர்.
அதை தடுத்த, பஞ்சாயத்து தலைவர், 'நான்கு பேரில் ஒருவரை, அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம்' என, கூறியுள்ளார். ஆனால், நால்வரும், அந்த பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, அந்த பெண்ணிடம் 'நீ யாரை விரும்புகிறாய் என சொல்; திருமணம் செய்து வைக்கிறோம்' என, பெற்றோர் கேட்டனர். அதற்கு அந்த பெண்ணால் பதில் சொல்ல முடியவில்லை.


வாழ்த்து

உடனே, பஞ்சாயத் தலைவர், 'குலுக்கல் முறையில் நால்வரில் ஒருவரை தேர்வு செய்யலாம்' என்றார். அதை பெண்ணும், பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். உடனே, நான்கு பேரின் பெயர்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் குலுக்கி போடப்பட்டன. அவற்றில் ஒன்றை, அப்பெண் எடுத்தார். இதையடுத்து, அந்த சீட்டிற்கு உரியவர், ஊரார் முன்னிலையில், அந்த பெண்ணை தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு, இதர நண்பர்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
10-மார்-202110:41:45 IST Report Abuse
Ramalingam Shanmugam நாலு பேருடன் பஞ்சயட்டும் சேர்த்திருப்பான்
Rate this:
Cancel
Rajagopal - Chennai,இந்தியா
08-மார்-202115:38:54 IST Report Abuse
Rajagopal இதே எங்க பெரியார் மண்ணா இருந்தா நாலு பேரையும் கட்டி வெச்சிருப்போம். 50 வருஷமா எவ்ளோ தலீவர்கள் இங்க அத அசால்ட்டா பண்றாங்க.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
07-மார்-202109:40:22 IST Report Abuse
pattikkaattaan தாலி கட்டியவன் எஸ்கேப் ஆகாம பார்த்துக்கோங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X