பொது செய்தி

இந்தியா

'பிளாட்பார்ம் டிக்கெட் உயர்த்தப்பட்டது ஏன்?'

Added : மார் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவே, ரயில்வே ஸ்டேஷன் களில், 'பிளாட்பார்ம் டிக்கெட்' கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது' என, ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்திய ரயில்வே சார்பில், குறைந்த துார ரயில்களின் பயண கட்டணம், சமீபத்தில் உயர்த்தப் பட்டது. கொரோனா காலத்தில், பயணியரின் அவசியமற்ற பயணங்களை தடுக்கவே, கட்டணம்
 'பிளாட்பார்ம் டிக்கெட் உயர்த்தப்பட்டது ஏன்?'

புதுடில்லி:'கொரோனா காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவே, ரயில்வே ஸ்டேஷன் களில், 'பிளாட்பார்ம் டிக்கெட்' கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது' என, ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்திய ரயில்வே சார்பில், குறைந்த துார ரயில்களின் பயண கட்டணம், சமீபத்தில் உயர்த்தப் பட்டது. கொரோனா காலத்தில், பயணியரின் அவசியமற்ற பயணங்களை தடுக்கவே, கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக, ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சமீபத்தில், குறிப்பிட்ட ரயில்வே ஸ்டேஷன் களில், 'பிளாட்பார்ம் டிக்கெட்' கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது, குறைந்த துார ரயில்களின் குறைந்தபட்ச கட்டணத்திற்கு நிகராக உள்ளது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:குறிப்பிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டும், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ரயில்வே ஸ்டேஷன்களில் அவசிய மற்று, அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே, இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
06-மார்-202117:13:12 IST Report Abuse
R Hariharan இது மிகவும் தவறு. மக்கள் பயணம் பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். மற்ற மக்கள் ரயில்வே ஸ்டேஷன்களில் அனுமதி இல்லை. என்கியூத்னு மக்கள் வருகிறார்கள். அப்படி என்றல் எங்கோ தவறு நடக்கிறது. ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்யாமல் மக்கள் ரயில்களில் , ரயில்வே ஸ்டேஷன் மக்கள் அனுமதி இல்லை. இவர்கள் வேண்டுமென்றே டிக்கெட் உயர்த்தியிருக்கிறார்கள். இது தவறு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X