சமூக ஊடகம்: சுப்ரீம் கோர்ட் கேள்வி

Updated : மார் 07, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: 'சமூக ஊடகங்களை ஒழுங்குமுறைபடுத்துவது தொடர்பாக, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ஆட்சேபத்துக்குரிய உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலான அம்சம் எதுவும் இல்லை' என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.'ஆன்லைன்' வாயிலாக, திரைப்படங்கள் மற்றும் வலைத்தொடர்களை தயாரித்து ஒளிபரப்பி வரும்,
Social Media, SC, Supreme Court, சமூக ஊடகம்,சுப்ரீம் கோர்ட், கேள்வி

புதுடில்லி: 'சமூக ஊடகங்களை ஒழுங்குமுறைபடுத்துவது தொடர்பாக, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ஆட்சேபத்துக்குரிய உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலான அம்சம் எதுவும் இல்லை' என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

'ஆன்லைன்' வாயிலாக, திரைப்படங்கள் மற்றும் வலைத்தொடர்களை தயாரித்து ஒளிபரப்பி வரும், 'அமேசான் பிரைம்' ஓ.டி.டி., தளத்தில், தாண்டவ் என்ற வலைத்தொடர், சமீபத்தில் வெளியானது.இதில், உத்தர பிரதேச போலீஸ், ஹிந்து மத கடவுள்கள் மற்றும் நாட்டின் பிரதமர் குறித்து, தரக்குறைவான கருத்துக்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

உத்தர பிரதேசம் உட்பட, பல்வேறு மாநிலங்களில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டன.அமேசான் பிரைம் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் அபர்ணா புரோஹித் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக, உ.பி.,யின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், அபர்ணா புரோஹித் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு, சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அபர்ணா புரோஹித்தை கைது செய்ய தடை விதித்து, நீதிமன்றம் உத்தர விட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் கூறியதாவது:சமூக ஊடகங்களை ஒழுங்குமுறைபடுத்துவது தொடர்பாக, மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் வெளியிட்டது. அவை முழுதுமே வெறும் வழிகாட்டுதல்களாக உள்ளன. ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை வெளியிடுபவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலான வழிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''நீதிமன்றத்தின் கருத்தை, மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்கும். இது தொடர்பாக வகுக்கப்படும் வழிமுறைகள் அல்லது சட்டங்கள் குறித்த விபரங்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
06-மார்-202113:38:26 IST Report Abuse
sankaseshan அன்பு நீங்கள் சொல்வது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவசரநிலை காலத்தில் நடந்தது. அம்பானிக்கு ஆதரவு கிடைத்தது முழுக்க முழுக்க காங்கிரஸ்கரன் மூலமாகத்தான் இதெல்லாம் நினைவில் இல்லையோ ?
Rate this:
Cancel
06-மார்-202110:19:07 IST Report Abuse
ஆப்பு ஆ..ஊன்னா அமெரிக்காங்கறவங்க அங்கே இருக்கும் கருத்து சுதந்திரம் பத்தி பேச மாட்டாங்க. ட்ரம்ப்பை ஒரு வடி கட்டுன முட்டாள்னு டீ.வி ல பேசுற அளவுக்கு அங்கே கருத்து சுதந்திரம் உண்டு.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
07-மார்-202111:54:16 IST Report Abuse
கல்யாணராமன் சு.அங்கேயும் பொய் செய்திகளை பரப்பினாலோ,, மதத்தை இழிவுபடுத்தறமாதிரி (blasphemy) படம் எடுத்தாலோ, சட்ட ரீதியா தண்டனை உண்டுங்கறது தெரியுமா, தெரியாதா ??????...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
06-மார்-202104:55:20 IST Report Abuse
blocked user சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருப்போரின் உண்மையான அடையாளங்களை உறுதி செய்தபின் கணக்கு வைக்க அனுமதிக்கும் படி ஆணை பிரப்பித்தால் பாதிக்கு மேல் கணக்குகள் காணாமல்ப்போகும். ஆர்வலர்களின் வருமானத்தை சரி பார்த்தாலே போதும் அவர்கள் ஒழுங்காக நடந்து கொள்வார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X