பொது செய்தி

இந்தியா

மல்லையா நாடு கடத்தல் பிரிட்டன் திட்டவட்டம்

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : 'தொழிலதிபர் விஜய் மல்லையாவை சட்டப்படி தான் நாடு கடத்த முடியுமே தவிர, அவசரத்திற்காக குறுக்கு வழியை நாட முடியாது' என, பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனர் விஜய் மல்லையா, பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனை திரும்ப செலுத்தாமல், 2016ல் பிரிட்டனுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்த, கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை,
Vijay Mallya, Mallya, Extradition Case, UK, மல்லையா, நாடு கடத்தல், பிரிட்டன்

புதுடில்லி : 'தொழிலதிபர் விஜய் மல்லையாவை சட்டப்படி தான் நாடு கடத்த முடியுமே தவிர, அவசரத்திற்காக குறுக்கு வழியை நாட முடியாது' என, பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனர் விஜய் மல்லையா, பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனை திரும்ப செலுத்தாமல், 2016ல் பிரிட்டனுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்த, கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, பிரிட்டன் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.


latest tamil news




எனினும், விஜய் மல்லையா இன்னும் நாடு கடத்தப்படாமல் உள்ளது குறித்து, பிரிட்டனுக்கான இந்திய துாதர் அலெக்ஸ் எல்லிஸ், டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குற்றவாளி ஒருவரை நாடு கடத்துவது என்பது, நிர்வாகம் மற்றும் நீதித் துறை இணைந்து மேற்கொள்ளும் பணி. விஜய் மல்லையா விவகாரத்தை பொறுத்தவரை, நிர்வாக ரீதியில் என்ன செய்ய வேண்டுமோ அதை, பிரிட்டன் உள்துறை செயலர் செய்துள்ளார்.

நீதித் துறையின் பங்கும் இதில் இருப்பதால், அனைத்தும் சட்ட விதிமுறைகளின் படி தான் நடக்கும். அவசரத்துக்காக குறுக்கு வழியில் நாடு கடத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. அது, நீதிபதிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
06-மார்-202113:56:47 IST Report Abuse
Kalyan Singapore பிரிட்டனின் ஒரு பிரஜையை கொன்ற அமெரிக்கா தூதரகத்தில் உள்ள ஒருவரை மட்டும் திரும்ப பிரிட்டனுக்கு அனுப்ப வேண்டும் என்று கதறுகிறீர்களே அப்போது இதே நியாயத்தை ஏன் கருதுவதில்லை ?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
06-மார்-202112:55:25 IST Report Abuse
bal ஒரு இந்தியனை எப்படி உங்கள் நாட்டில் தங்க அனுமதித்தீர்கள்... உங்கள் நாடே இந்தியாவை கொள்ளை செய்த நாடுதான்..உங்கள் சொத்து எங்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பட்டதுதானே. திருடர்கள் கூட்டம் இங்கிலாந்து.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
06-மார்-202111:27:29 IST Report Abuse
vbs manian எப்படி வேண்டுமானாலும் சமாளிக்கலாம். இதே விதமான தில்லுமுல்லு பிரிட்டனில் நடந்தால் என்ன செய்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X