ஊடுருவ முயலும் மியான்மர் குடிமக்கள்; சர்வதேச சட்டத்தை மதிக்கும் இந்தியா

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
மியான்மரில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு ஜனநாயக ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தலைவர்கள் கண்டனம்மியான்மர் ராணுவத்துக்கு தற்போது உலக அளவில் முக்கிய தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐநா மனித உரிமை தலைவரும் முன்னதாக ராணுவ

மியான்மரில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு ஜனநாயக ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்டோர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.



latest tamil news





தலைவர்கள் கண்டனம்


மியான்மர் ராணுவத்துக்கு தற்போது உலக அளவில் முக்கிய தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐநா மனித உரிமை தலைவரும் முன்னதாக ராணுவ அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

தற்போது மியான்மரில் ராணுவத்தினர் அடக்குமுறையை தாங்க முடியாமல் இந்திய எல்லை வழியாக மிசோரம் மாநிலத்துக்குள் நுழைய மியான்மர் நாட்டினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து விழித்துக்கொண்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மறைமுகமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் மியான்மர் குடிமக்களை தடுத்து அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புகிறது.

மிசோரம் மாகாண காவல்துறையும் தற்போது விழிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 24 மணிநேரமும் எல்லையில் ஊடுருவலைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் எல்லையை தாண்டும்போது அவர்கள் தற்காலிகமாக அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




ஆபத்தில் இருக்கும் மியான்மர் குடிமக்களுக்கு உதவிக்கரம் நீட்ட இந்திய வெளியுறவுத்துறை முயல்கிறது. ஆனால் மியான்மரின் அனுமதி இன்றி குடிமக்களை இந்தியாவுக்குள் வரவழைத்து ஆதரவளிப்பது இருநாட்டு வெளியுறவுத் துறைகளுக்குள்ளும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும். சர்வதேச சட்டத்தை மதித்து அதற்கேற்றார்போல செயல்பட இந்தியா விரும்புகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மார்-202115:55:09 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) தயவுசெய்து ரோஹிங்கியாக்களை உள்ளே விட்டுவிடாதீர்கள் பின்னர் தினம் தினம் குண்டுவெடிப்பு நடத்தி கொண்டாடுவானுங்க
Rate this:
Cancel
தமிழன் - தமிழகம்,இந்தியா
06-மார்-202112:33:54 IST Report Abuse
தமிழன் அகதிகளை அனுமதிக்காமல் இருந்திருந்தால் அத்வானி போன்றவர்கள் இந்திய குடியுரிமை பெற்றிருக்கமாட்டார்கள்...
Rate this:
Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா
06-மார்-202114:51:03 IST Report Abuse
Chandradas Appavooஅகதி எண்டால் யார் எண்டு உனக்கு தெரியவில்லை. எதாவது எழுத வேண்டும் எண்டு எழுததே....
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
06-மார்-202112:31:42 IST Report Abuse
மன்னிப்பு ஆமா அந்த மதத்தில் அப்படி என்ன இருக்கு? அவர்களும் நிம்மதியாக இருப்பதில்லை.மற்றவர்களையும் நிம்மதியாக இருக்க விடுவதும் இல்லை. புத்தம் சரணம் கச்சாமி. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X