அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதலில் 6 பேர்: அ.தி.மு.க., போட்டனர் பிள்ளையார் சுழி!

Updated : மார் 06, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (14+ 58)
Share
Advertisement
அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்முதலில் 6 பேர்நல்ல நாள் என்பதால்போட்டனர் பிள்ளையார் சுழிசென்னை :அ.தி.மு.க., சார்பில், நேற்று ஆறு தொகுதிகளுக்கான, முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கூட்டணி இறுதியாகாத நிலையில், நேற்று நல்ல நாள் என்பதால், முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்காக, நேற்று காலை, 9:30 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர், கட்சி
TN election, ADMK, DMK, PMK, பிள்ளையார் சுழி, அதிமுக, திமுக, பாமக


அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்முதலில் 6 பேர்
நல்ல நாள் என்பதால்
போட்டனர் பிள்ளையார் சுழி

சென்னை :அ.தி.மு.க., சார்பில், நேற்று ஆறு தொகுதிகளுக்கான, முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கூட்டணி இறுதியாகாத நிலையில், நேற்று நல்ல நாள் என்பதால், முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்காக, நேற்று காலை, 9:30 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர், கட்சி தலைமை அலுவலகம் வந்தனர். அமைச்சர்கள், மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தினர். சில மாவட்ட செயலர்களை, தனியாக அழைத்து பேசினர்.

பகல், 2:00 மணிக்கு, ஆலோசனை நிறைவடைந்தது. பின், ஆறு தொகுதிகளுக்கான, வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.,க்கள் சண்முகநாதன், தேன்மொழி ஆகியோர் பெயர்கள், அந்த பட்டியலில் இடம் பெற்றன.ஓ.பி.எஸ்., - முக்குலத்தோர், இ.பி.எஸ்., - கொங்கு வேளாள கவுண்டர், ஜெயகுமார் - மீனவர், சி.வி.சண்முகம் - வன்னியர், சண்முகநாதன் - நாடார், தேன்மொழி - தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

பெரிய சமுதாயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில், ஒருவரை தேர்வு செய்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள், வாழ்த்து கோஷம் எழுப்பி, இனிப்புகள் வழங்கினர். தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி வெளியே வந்த, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., இருவரும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை வணங்கினர்.


புதுமுகங்கள் இல்லை!


முதல் பட்டியலில் புதுமுகம் இல்லை. ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில், மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளனர். போடி நாயக்கனுார் தொகுதியில், ஓ.பி.எஸ்., 1991, 2011, 2016 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். இடைப்பாடி தொகுதியில், இ.பி.எஸ்., 1989, 1991, 2011, 2016 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் ஜெயகுமார், சென்னை, ராயபுரம் தொகுதியில், 2001, 2006, 2011, 2016 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். அமைச்சர் சண்முகம், விழுப்புரம் தொகுதியில், 2011, 2016 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், சண்முகநாதன், 2001, 2011, 2016 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். தேன்மொழி, நிலக்கோட்டை தொகுதியில், 2006 தேர்தலிலும், 2019 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.


latest tamil news

6 ஏன்?முகூர்த்த நாள் என்பதால், ஜோதிடர்கள் அறிவுரைபடி, அனைத்து கட்சிகளுக்கும் முன், ஆறு பேர் பட்டியலை, அ.தி.மு.க., வெளியிட்டது. ஓ.பி.எஸ்.,சுக்கு, ராசி எண், 5; இ.பி.எஸ்.,சுக்கு, 6. எனவே, 5ம் தேதி, ஆறு வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

***************


பா.ம.க., தேர்தல் அறிக்கை'ஜோர்' அறிவிப்புகள்
'பளபள'ப்பு கூட்டி
பரபரப்புடன் வெளியீடு
தமிழகத்தில் முதல் கட்சியாக, பா.ம.க., நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 வகுப்பு வரை இலவச கல்வி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், அனைவருக்கும் இலவச மருத்துவம் போன்ற ஜோரான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அதற்கு பளபளப்பு கூட்டும் வகையில், 'வளர்ச்சிமிகு தமிழகம் படைப்போம்; தமிழகத்தின் வளர்ச்சியே, தமிழ் மக்களின் மகிழ்ச்சி' என்ற முழக்கத்துடன், 135 பக்க தேர்தல் அறிக்கையை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பரபரப்புடன் வெளியிட்டு உள்ளார். அடுத்த மாதம், 6ல், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று, 23 தொகுதிகளில், பா.ம.க., போட்டியிடுகிறது. எந்தெந்த தொகுதிகள் பா.ம.க.,வுக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி, விருப்ப பட்டியலை, அ.தி.மு.க.,விடம் வழங்கி உள்ளது.

ஓரிரு நாளில், பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளின் பெயர் விபரம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில், முதல் கட்சியாக, வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை, பா.ம.க., நேற்று சென்னையில் வெளியிட்டுஉள்ளது. அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட, இந்த தேர்தல் அறிக்கையில், மழலையர் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும்.

தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, அரசே செலுத்தும் என்பது போன்ற, 'பளபள' அறிவிப்புகள் இடம் பெற்று உள்ளன.அனைவருக்கும் இலவச மருத்துவம், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், திருச்சி - இரண்டாவது தலைநகரம், மதுரை - மூன்றாவது தலைநகரம், கோவை - தொழில் நகரம் என அறிவிக்கப்படும் என்பது உள்ளிட்ட, 48 பிரிவுகளில், 167 ஜோரான அறிவிப்புகளும் இடம் பெற்று உள்ளன. - நமது நிருபர் -

***************


முழுதும் மார்ச் 10ல் தி.மு.க., வேட்பாளர் பட்டியல்கூட்டணிகளை மடக்க
முன்கூட்டியே தேதி அறிவிப்பு

சென்னை :தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல், வரும் 10ம் தேதி, ஒரே கட்டமாக, முழுமையாக வெளியாக உள்ளது. சென்னையில் நேற்று நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், இதை தெரிவித்தார். முரண்டு பிடிக்கும் காங்கிரஸ், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை மடக்க, பட்டியல் வெளியாகும் தேதியை, முன்கூட்டியே அறிவித்துள்ளார் ஸ்டாலின் என்கிறது, அறிவாலய வட்டாரம்.

கூட்டணியில், காங்., - ம.தி.மு.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில், இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. பல சுற்றுப் பேச்சு நடத்தியும், இழுபறி நீடிக்கும் நிலையில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.

அதில், ஸ்டாலின் பேசியதாவது: 'விடியலுக்கான முழக்கம்' எனும் தலைப்பில், திருச்சியில் நாளை சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. காலை, 11:00 மணிக்கு துவங்கி, இரவு, 8:00 மணி வரை நடைபெற உள்ளது.பிரமாண்டமான கூட்டத்தில் வெளியிடப்படும், பிரகடனத்தில் உள்ளவற்றை செய்து காட்டுவோம் என்ற உறுதிமொழியை, மக்கள் முன் வழங்க இருக்கிறேன். ஆட்சிக்கு வந்த பின், அதை நிறைவேற்றாவிட்டால், பொது மக்கள் கேள்வி கேட்கலாம் என்ற உரிமையையும் வழங்க இருக்கிறேன்.

தேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயாளிகள் போன்றோர், தபால் ஓட்டுப் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு இருப்பதால், அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நேர்காணல், இன்று முடிகிறது. வரும் 10ம் தேதி, வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் முழுமையாக வெளிவரும். அவர்களின் வெற்றிக்காக, அனைவரும் பாடுபட வேண்டும். தேர்தலில் போட்டியிட, அனைவருக்கும் வாய்ப்பு கொடுப்பது இயலாத காரியம். எனவே, அனைத்து தொகுதிகளிலும், நீங்களே நிற்பதாக கருதி பாடுபட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


புயல் வேகம்


கட்சியினருக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்: வரும் 11ல், களத்தின் கதாநாயகனாக, கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு; பின், பிரசார பயணம் என, புயல் வேகத்தில் செயல்பட வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன். அதே பொறுப்பும், கடமையும் உங்களுக்கும் இருக்கிறது. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில், கருணாநிதி நிற்கிறார் என்ற எண்ணத்துடன், அனைவரும் செயல்பட வேண்டும். ஓட்டு சேகரிக்கும் குழு அமைத்து, தொகுதிக்கு 50 ஆயிரம் வீடுகளுக்கு சென்று, தொலைநோக்கு செயல் திட்ட பிரகடனத்தை, வாக்காளர்களிடம் வழங்க வேண்டும். தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நிறைவேற்ற இருக்கிறோம் என்பதை எடுத்துரைத்து, வெற்றிக்கான ஓட்டுகளை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சென்னை அறிவாலயத்தில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், இன்று, தி.மு.க., குழுவினர், தொகுதி பங்கீடு தொடர்பாக, இறுதி கட்ட பேச்சு நடத்துகின்றனர். இதில், கூட்டணி கட்சிகள் மீண்டும் முரண்டு பிடிக்காமல், கொடுக்கும் தொகுதிகளை ஏற்கும் வகையில் மடக்க, தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் முழுதும், 10ம் தேதி வெளியிடப்படும் என, முன்கூட்டியே தேதியை, ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று காலை, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்ட பின், மாலையில், காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சு, மீண்டும் நடக்க உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14+ 58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
koradurairaj - tirupur,இந்தியா
06-மார்-202121:24:16 IST Report Abuse
koradurairaj கடந்த தேர்தலின் போது பூரண மதுவிலக்கு தான் முதல் கையெழுத்துன்னு சொன்ன மருத்துவர்ர்ர். இப்போ மதுவிலக்கு குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.. என்ன மாயமோ...
Rate this:
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
06-மார்-202118:14:27 IST Report Abuse
pazhaniappan முதலில் ஆறுபேர் மற்றதெல்லாம் அக்கப்போர் ,
Rate this:
Cancel
06-மார்-202109:09:25 IST Report Abuse
சம்பத் குமார் 1). திராவிட சாணக்கியர் திரு எடப்பாடியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.2). Good move. Keep going. All the best. நன்றி ஐயா.
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
06-மார்-202114:45:15 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்ஐந்து மாநில தேர்தல்கள் வருகின்றது 1 - நம்ம ஜீக்கு கொலை மிரட்டல் வரலாம் 2 - ராணுவ வீரர்கள் தாக்கப்படலாம் 3 - பாகிஸ்தான் எல்லையில் ஊடுறுவலாம் 4 - முக்கிய நகரங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஊடுறுவலாம் 5 - சர்ஜிகல் அட்டாக் நடந்ததாக கூறப்படலாம் 6 - நம்ம ஜீ, பிரச்சார மேடையில் அழலாம் 7 - பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் சில நாட்கள் உயராமல் இருக்கலாம் 8 - ஓடுக்கப்பட்டவர்களிடம் சமத்துவமும், சிறுபான்மையினரிடம் சகோதரத்துவமும் பேசலாம் 9 - நம்ம ஜீயும், ஜண்டா ஜீயும் வாராவாரம் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு செல்லலாம் 10 - கல்கத்தாவில் காளிக்கும், தமிழகம், புதுவையில் வேலுக்கும் டிமாண்ட் பெருகலாம். எல்லாம் இ வி எம் ல் விளையாடும் விளையாட்டை திசைதிருப்ப அன்றி வேறில்லை பராபரமே.....
Rate this:
karupanasamy - chennai,இந்தியா
06-மார்-202117:23:47 IST Report Abuse
karupanasamyஎல்லாத்துக்கும் ஒரே கருத்த போடாதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X