அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள்

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (115)
Share
Advertisement
சென்னை :அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 20 சட்டசபை தொகுதிகளும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில், முதல் கட்சியாக, பா.ம.க.,வுக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக, பா.ஜ., உடன் கூட்டணி பேச்சு துவங்கியது. பா.ஜ., தரப்பில், 60 தொகுதிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதைக்கண்டு, அ.தி.மு.க., மிரண்டது. பேச்சுவார்த்தையின்போது, 40
BJP, ADMK, TN election

சென்னை :அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 20 சட்டசபை தொகுதிகளும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க., கூட்டணியில், முதல் கட்சியாக, பா.ம.க.,வுக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக, பா.ஜ., உடன் கூட்டணி பேச்சு துவங்கியது. பா.ஜ., தரப்பில், 60 தொகுதிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதைக்கண்டு, அ.தி.மு.க., மிரண்டது.


latest tamil news



பேச்சுவார்த்தையின்போது, 40 தொகுதிகள் வேண்டும் என, பா.ஜ., பிடிவாதம் பிடித்தது. அ.தி.மு.க., தரப்பில், 15 தொகுதிகளில் இருந்து பேரத்தை துவக்கினர். இதனால் பேச்சில் இழுபறி ஏற்பட்டது. அதேநேரம் தே.மு.தி.க.,வும் அதிக தொகுதிகளை கேட்டது.
‛தே.மு.தி.க., மற்றும் சிறிய கட்சிகளுக்கு சீட் ஒதுக்கவேண்டி இருப்பதால், பா.ஜ.,விற்கு அதிக தொகுதிகள் ஒதுக்க இயலாது' என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news




கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து, தமிழகத்தில் தேர்தலை சந்திக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., - -பா.ஜ., இடையே, நேற்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, தமிழகத்தில், 20 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கபட்டுள்ளன.
இடைத்தேர்தல் நடக்கும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளருக்கு, அ.தி.மு.க., தனது முழு ஆதரவை அளிக்கும். இதற்கான ஒப்பந்தத்தில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வர், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பா.ஜ., தேசிய பொதுச் செயலர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பா.ஜ.,வுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அதைவிட குறைவான தொகுதிகளை, தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கவாய்ப்புள்ளது. அதேநேரம் கூட்டணியில், அ.ம.மு.க., இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்பாவி - coimbatore,இந்தியா
07-மார்-202106:06:13 IST Report Abuse
அப்பாவி அறுபது தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருந்தும் இருபது தொகுதிகளில் உடன்பாடு கொண்டு இருக்கும் பாலியல் ஜல்ஸா கட்சியின் பெரிய மனது யாருக்கு வரும். எல்லா தொகுதிகளிலும் அமோகமாக தோல்வியடைய வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-மார்-202117:46:14 IST Report Abuse
J.V. Iyer இருபதிலும் வெற்றி பெற உழையுங்கள். மக்களை சந்தியுங்கள். வாழ்த்துக்கள் பாஜகவுக்கு.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மார்-202122:41:44 IST Report Abuse
தல புராணம்ஆழக்குழி பறித்து அதிலே 20 முட்டையிட்டு அண்ணாந்து பாத்தா அத்தனையும் கூமுட்டை.....
Rate this:
அப்பாவி - coimbatore,இந்தியா
07-மார்-202106:07:31 IST Report Abuse
அப்பாவிமக்கள்: வரட்டும் வரட்டும் ஒரு கை பார்க்கிறோம்...
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
06-மார்-202116:22:43 IST Report Abuse
திராவிஷ கிருமி கொடுங்கோல் ஊழல் மன்னராட்சி தீயமுகவும் இத்தாலிய தேசத்துரோக கொள்ளை கும்பல் காங்கியும் விரட்டியடிக்கப்படும் நாள் நெருங்குகிறது...
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மார்-202122:43:41 IST Report Abuse
தல புராணம்விவசாயக்கடன் தள்ளுபடின்னுட்டு ஒரு அதிமுக அல்லக்கை குடும்பம் 40 லட்சம் ஆட்டையை போட்டிருக்காங்களாம்.. நகைக்கடன் தள்ளுபடின்னுட்டு இப்பவும் கமிஷனுக்கு பின்தேதியிட்டு கடன் கொடுத்து தள்ளுபடி ஜோரா நடக்குது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X