பொது செய்தி

தமிழ்நாடு

'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' சொல்கிறது இந்த மணல் சிற்பம்

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021
Share
Advertisement
கோவை:நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, உக்கடம் பெரிய குளக்கரையில், பொதுமக்கள் பார்வைக்கு மணல் சிற்பம் உருவாக்கப்பட்டு உள்ளது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எவ்வாறு ஓட்டு போடுவது என்பது தொடர்பாகவும், ஓட்டு பதிவானதா என்பதை உறுதி செய்யும் ரசீது வருகிறதா என்பதையும், சரிபார்க்கும் இயந்திரங்களின் செயல் விளக்கம், கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில்
 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' சொல்கிறது இந்த மணல் சிற்பம்

கோவை:நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, உக்கடம் பெரிய குளக்கரையில், பொதுமக்கள் பார்வைக்கு மணல் சிற்பம் உருவாக்கப்பட்டு உள்ளது.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எவ்வாறு ஓட்டு போடுவது என்பது தொடர்பாகவும், ஓட்டு பதிவானதா என்பதை உறுதி செய்யும் ரசீது வருகிறதா என்பதையும், சரிபார்க்கும் இயந்திரங்களின் செயல் விளக்கம், கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் செய்து காட்டப்படுகிறது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புனரமைக்கப்பட்ட, உக்கடம் பெரிய குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சமீபத்தில் திறந்து விடப்பட்டது; தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மணல் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. மலைக்குன்று போல் மூன்று லோடு மணல் கொட்டி, 'என் ஓட்டு; என் உரிமை'; 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல'; ஓட்டுப்பதிவு நாள் - ஏப்., 6; நுாறு சதவீத ஓட்டுப்பதிவு முக்கியம் என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் ஆணைய முத்திரை, ஓட்டுப்பதிவு செய்ததற்காக, விரலில் மை வைத்திருப்பது போல், மணல் சிற்பம் வரையப்பட்டுள்ளது. குனியமுத்துாரை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா, தனது நண்பர்கள் கோகுல்குமார், ரித்திஷ் ஆகியோர் உதவியுடன், 18 மணி நேர முயற்சியில், இந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X