அரசியல் செய்தி

தமிழ்நாடு

எஸ்றா சற்குணம் மகள் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு

Added : மார் 06, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை:பேராயர் எஸ்றா சற்குணத்தின் மகள் தலைமையில், பேராயர்கள் மற்றும் ஆயர்கள், நேற்று முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்தனர்.தமிழகம் முழுதும், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட, மாபெரும் பேராயமாக, இ.சி.ஐ., கிறிஸ்துவ திருச்சபை இயங்கிவருகிறது. இதன் நிரந்தர நிர்வாக பேராய பொறுப்பு வகித்து வருபவர் எஸ்றா சற்குணம்; தி.மு.க., ஆதரவாளர். இவரது மகள்
 எஸ்றா சற்குணம் மகள்  அ.தி.மு.க.,விற்கு ஆதரவு

சென்னை:பேராயர் எஸ்றா சற்குணத்தின் மகள் தலைமையில், பேராயர்கள் மற்றும் ஆயர்கள், நேற்று முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழகம் முழுதும், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட, மாபெரும் பேராயமாக, இ.சி.ஐ., கிறிஸ்துவ திருச்சபை இயங்கிவருகிறது. இதன் நிரந்தர நிர்வாக பேராய பொறுப்பு வகித்து வருபவர் எஸ்றா சற்குணம்; தி.மு.க., ஆதரவாளர். இவரது மகள் கதிரொளி மாணிக்கம் தலைமையில், நேற்று பேராயர்கள் மற்றும் ஆயர்கள், முதல்வர் பழனிசாமியை , அவரது வீட்டில் சந்தித்தனர்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார். சந்திப்பின்போது, அ.தி.மு.க., வழிகாட்டுக் குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், கொள்கை பரப்பு துணைச் செயலரான அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் உடன்இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
07-மார்-202120:52:31 IST Report Abuse
Nallavan Nallavan எல்லா இடத்துலயும் துண்டு போட்டு வைக்கணும்ங்கிறது எல்லா மார்க்கத்துக்கும் ஏற்ற விஷயமே .........
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மார்-202117:18:59 IST Report Abuse
Malick Rajaமார்க்கத்தில் பிறத்தவருக்கு எப்போதும் மார்க்க நினைவு இருந்து கொண்டே இருக்கும் காரணம் ஜீன் அல்லவே .....
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
06-மார்-202118:20:42 IST Report Abuse
sridhar திமுகவில் அப்பன் , அதிமுகவில் மகள் . யார் ஆட்சிக்கு வந்தாலும் ‘ தொழில்’ பாதிப்பு இல்லாம நடக்கும். அட வெக்கம்கெட்டவங்களா. .
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
06-மார்-202115:55:45 IST Report Abuse
Shekar பிழைக்க தெரிந்த குடும்பம், பாவம் சாமானிய மனிதன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X