பொது செய்தி

தமிழ்நாடு

சுக்கு காபி விற்கும் சரஸ்வதி பாட்டி: வீட்டுக்கு ‛விசிட்' அடித்த ‛கடவுள்!'

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
வறுமையால் ஒரு மகள் இறந்து விட, புத்திசுவாதீனமில்லாத ஒரு மகன் எங்கோ போய் விட, பக்கவாதத்தால் படுத்த படுக்கையான கணவரையும், பார்வை குறைபாடுள்ள மகனையும் சுக்கு காபி விற்று காப்பாற்றி வரும், சரஸ்வதி பாட்டி குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.இப்போது எப்படி இருக்கிறார் அவர் என அறிய, நேரில் சென்றோம்...!நம் செய்தியை படித்த வாசகர்கள், ரங்கேகவுடர் வீதி அருகில்
 சுக்கு காபி விற்கும் சரஸ்வதி பாட்டி: வீட்டுக்கு ‛விசிட்' அடித்த ‛கடவுள்!'

வறுமையால் ஒரு மகள் இறந்து விட, புத்திசுவாதீனமில்லாத ஒரு மகன் எங்கோ போய் விட, பக்கவாதத்தால் படுத்த படுக்கையான கணவரையும், பார்வை குறைபாடுள்ள மகனையும் சுக்கு காபி விற்று காப்பாற்றி வரும், சரஸ்வதி பாட்டி குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இப்போது எப்படி இருக்கிறார் அவர் என அறிய, நேரில் சென்றோம்...!நம் செய்தியை படித்த வாசகர்கள், ரங்கேகவுடர் வீதி அருகில் ஈஸ்வரன் கோவில் வீதியில் வசிக்கும் சரஸ்வதி பாட்டியின் வீட்டுக்கே சென்று, தங்களால் முடிந்த பண உதவியை செய்துள்ளனர். ஒவ்வொருவரும் 1000, 2000, 10 ஆயிரம் என, 40 ஆயிரம் வரை பணம் கொடுத்து உதவி உள்ளனர்.நம்மிடம் பேச, பேச அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை...

''நான் ஒரு சாதாரண மனிஷிங்கையா, இந்த கிழவி மேல ஜனங்க இம்புட்டு பிரியம் காட்டுவாங்கன்னு எனக்கு தெரியாது. நீங்க பேப்பருல போட்டத பாத்துட்டு, போன்ல கூப்பிட்டு பல பேரு ஆறுதல் சொன்னாங்க,''''திருப்பூருல இருந்து இந்திரான்னு ஒரு அம்மா, போன்ல விலாசத்தை விசாரிச்சு வீட்டுக்கே வந்துட்டாங்க. என்ன பார்த்துட்டு அப்படியே அழுதுட்டாங்க. பையிலிருந்து, 25 ஆயிரம் பணத்த எடுத்து கொடுத்துட்டு, 'கவலப்படாதிங்க பாட்டி, கடவுள் இருக்கார், காப்பாத்துவார்'ன்னாங்க,''

''எனக்கு அப்ப அவங்கதான் கடவுளா தெரிஞ்சாங்க. முதல்ல, பேரக்கூட சொல்ல மாட்டேன்னுட்டாங்க, கெஞ்சி கேட்டதால சொன்னாங்க. அப்புறம் மீனாட்சின்னு ஒரு டாக்டரம்மா வந்து, 10 ஆயிரம் ரூபா கொடுத்தாங்க,''

''செல் நம்பர கொடுத்து, ஏதாவது கஷ்டமுன்னா கூப்பிடுங்கன்னு சொன்னாங்க. அப்புறம் ரெண்டு பேரு ரெண்டாயிரம் கொடுத்தங்க, ரெண்டு பேரு ஆயிரம் ஆயிரம் கொடுத்தாங்க. பணம் கொடுத்தது ஒரு பக்கம் இருக்கட்டுங்கையா, அவங்க கட்டுன பாசம் இருக்கு பாருங்க, அத என்னால சாகுற வரை மறக்க முடியாது,''

''சின்ன குழந்தைக எல்லாம் வந்து, கையப்பிடிச்சு கவலப்படாதிங்க பாட்டிங்கிறாங்க. ஆண்டவன் அவங்களுக்கு நல்ல ஆயுச கொடுக்கணும். இந்த பணத்துல கொஞ்சத்தை, வீட்டுக்காரரு வைத்திய செலவுக்கு வெச்சுக்கிட்டு, 10 மாச வீட்டு வாடகை பாக்கி இருந்தது. அதை கொடுத்துட்டேன். உங்க பேப்பருக்கு ரொம்ப நன்றிங்கையா,'' என்று கைகூப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-மார்-202116:07:25 IST Report Abuse
Lion Drsekar தகுதியும் திறமையும் இருந்தும் எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உதவிக்கரம் நீட்டும் அதுவும் எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் சேவை செய்யும் ஒரே நாளிதழ் நமது தினமலர் மட்டுமே, யாராக இருந்தாலும் யாரிடமும் எதையும் எதிர்பாராமல் கடமை மட்டுமே பணிசெய்து செல்வது என்பதில் மட்டுமே குறியாக இருக்கும் வீரர்கள் இருப்பதால் நல்லவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
08-மார்-202119:16:47 IST Report Abuse
SexyGuy . அய்யா, நான் கடல் கடந்து வாழ்கிறேன். அந்த தாயாருக்கு நான் உதவி செய்ய வழி செய்யுங்கள். அவர் போன் நம்பர் தரவும். நன்றி.
Rate this:
Cancel
sattanathan - திருச்சி ,இந்தியா
08-மார்-202116:55:29 IST Report Abuse
sattanathan தினமும் இதுபோல் ஒரு ஏழைக்குடும்பத்தினை அடையாளப்படுத்தினால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X