தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே கட்டளை கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி, வறண்ட ஏரியில், கருகும் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில், கட்டளை கால்வாய் தண்ணீரில், 50க்கும் மேற்பட்ட ஏரிகள் மூலம், ஒரு போக சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.தற்போது, கட்டளை கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், 2,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.
திருமலை சமுத்திரம் பகுதியில், வறண்டு கிடக்கும் பிடாரி ஏரியில், காய்ந்த பயிர்களுடன், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூறியதாவது: கட்டளை கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறையிடம், கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது கதிர் வந்து, நெற்பயிர்கள் காய்ந்து கிடக்கின்றன. தேர்தல் நேரத்தில், தேர்தல் பணியை மட்டும் பார்க்கும் அதிகாரிகள், இங்கு சாகக் கிடக்கும் விவசாயிகளையும் கண்டுகொள்ள வேண்டும். உடனே தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE