வாஷிங்டன்: ''உயர் பதவிகளில் அமர்ந்து, அமெரிக்காவை, இந்திய வம்சாவளியினர் வழிநடத்தி வருகின்றனர்,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன், ஜன., 20ல் பதவியேற்றார். அதிபராகி, 45 நாட்களில், 55 உயர் பதவிகளில், இந்திய வம்சாவளியினரை நியமித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின், 'பெர்சிவரன்ஸ் ரோவர்' விண்கலம், கடந்த மாதம் தரையிறக்கப்பட்டது. இந்த விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவராக செயல்பட்டவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன்.
![]()
|
இந்நிலையில், விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு, நாசா சார்பில் நடந்த பாராட்டு விழாவில், அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், ''உயர் பதவிகளில் அமர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள், நாட்டை வழிநடத்துகின்றனர். ஸ்வாதி மோகன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட அனைவரும், சிறப்பாக செயல்படுகின்றனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE