அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: நம்மில் மாற்றம் வேண்டும்!

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது ஓட்டளிப்போரில் பெரும்பான்மையினர், ஊழல் இல்லாமல் ஆட்சி செய்த காமராஜருக்கு ஓட்டு போட்டிருக்க வாய்ப்பு இல்லை. காமராஜர் ஆட்சியை பற்றி, நுால்களில் தான் படித்து தெரிந்திருப்பர்.தமிழகத்தில் ஊழல் உட்புகுந்தது, தி.மு.க., ஆட்சிக்
TN election, Voters, Idhu Ungal Idam


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது ஓட்டளிப்போரில் பெரும்பான்மையினர், ஊழல் இல்லாமல் ஆட்சி செய்த காமராஜருக்கு ஓட்டு போட்டிருக்க வாய்ப்பு இல்லை. காமராஜர் ஆட்சியை பற்றி, நுால்களில் தான் படித்து தெரிந்திருப்பர்.

தமிழகத்தில் ஊழல் உட்புகுந்தது, தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான். தமிழகத்தில், காமராஜர் வளர்த்த காங்கிரஸ், ஊழல் நிறைந்த, தி.மு.க.,வுக்கு எதிராக அரசியல் செய்ய முடியவில்லை. காங்கிரசார் வேறு வழியின்றி, திராவிடக் கட்சிகளுக்கு காவடி துாக்க பழகி விட்டனர். தமிழக காங்கிரஸ் கட்சியினர், இனி எக்காலத்திலும் காமராஜர் ஆட்சி அமைக்க போவதில்லை.


latest tamil newsகொள்கை பிடிப்புமிக்க கம்யூனிஸ்ட்கள், இனி, 'ஊழல் இல்லாத ஆட்சி' என்ற வார்த்தையை பயன்படுத்தவே முடியாது. திராவிடக் கழகங்களுடன் கூட்டணி அமைத்த பின், ஊழல் குறித்து பேச, தோழர்களுக்கு தகுதி இருக்குமா? இவ்விரு கட்சிகளும், தி.மு.க.,வின் தயவை நாடி நிற்கின்றன. கொள்கையை மறந்து, அறிவாலயத்தில் மண்டியிட்டு கிடக்கின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால், பக்கத்து மாநிலமான கேரளாவில் நடக்கும் கம்யூ., ஆட்சி மீது, காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அந்த இரு கட்சிகளும், இங்கு கூட்டணி அமைத்து, கொஞ்சி குலாவுகின்றன. தமிழகத்தில் உள்ள, பா.ம.க., - ம.தி.மு.க., - வி.சி., - தே.மு.தி.க., - த.மா.க., போன்ற கட்சிகள் எந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டனவோ, அதை காற்றில் பறக்கவிட்டு, தேர்தல் நேரத்தில், திரைமறைவு பேரம் பேசி, நல்ல விலை படிந்ததும், தொண்டர்களை விற்று விடுகின்றன.

அக்கட்சித் தலைவர்கள் யாரும், முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. இதனால் தான், இரு திராவிடக் கட்சிகளும் தைரியமாக உள்ளன. மக்களாகிய நாம் மாறாமல், அரசியல்வாதி மட்டும் மாற வேண்டும் என்று நினைப்பது, மடமை. அவர்கள், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.எனவே, ஜாதி, மதம், பணத்திற்கு விலை போகாமல், புதியவரை தேர்வு செய்வோம். முடிந்தவரையில் நேர்மையானவரை கண்டறிந்து, அவருக்கு நம் விலைமதிப்புமிக்க ஓட்டை பதிவு செய்வோம்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மார்-202115:46:46 IST Report Abuse
ருத்ரா விலை மதிப்பு இல்லா ஓட்டுக்கள் உரிமைகள் நம்மிடம். தரக்குறைவானவர்களை தேர்ந்தெடுத்து கொடுத்ததை வாங்கி மக்கள் தங்களை தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம். நம் நாடு நம் மக்கள் என்பவரை தேர்வு செய்வோம்.
Rate this:
Cancel
Kamalarathinam M - Coimbatore,இந்தியா
06-மார்-202115:20:16 IST Report Abuse
Kamalarathinam M நியாயமான கருத்து, இளைய சமுதாயம் சிந்தித்து நல்ல தலைவரை தேர்ந்தெடுத்தால் கண்டிப்பாக புதிய சமுதாயத்தை அமைக்க முடியும். சிந்தித்து வாக்களியுங்கள் இளைய சமுதாயமே
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
06-மார்-202114:43:56 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் ஐந்து மாநில தேர்தல்கள் வருகின்றது 1 - நம்ம ஜீக்கு கொலை மிரட்டல் வரலாம் 2 - ராணுவ வீரர்கள் தாக்கப்படலாம் 3 - பாகிஸ்தான் எல்லையில் ஊடுறுவலாம் 4 - முக்கிய நகரங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஊடுறுவலாம் 5 - சர்ஜிகல் அட்டாக் நடந்ததாக கூறப்படலாம் 6 - நம்ம ஜீ, பிரச்சார மேடையில் அழலாம் 7 - பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் சில நாட்கள் உயராமல் இருக்கலாம் 8 - ஓடுக்கப்பட்டவர்களிடம் சமத்துவமும், சிறுபான்மையினரிடம் சகோதரத்துவமும் பேசலாம் 9 - நம்ம ஜீயும், ஜண்டா ஜீயும் வாராவாரம் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு செல்லலாம் 10 - கல்கத்தாவில் காளிக்கும், தமிழகம், புதுவையில் வேலுக்கும் டிமாண்ட் பெருகலாம். எல்லாம் இ வி எம் ல் விளையாடும் விளையாட்டை திசைதிருப்ப அன்றி வேறில்லை பராபரமே..
Rate this:
06-மார்-202117:05:57 IST Report Abuse
ஆரூர் ரங்இதுபோலதான் பால்கோட் தாக்குதல் போலி நாடகம் என்றீர். இப்போ பாகிஸ்தானே அதனை🤔 ஒத்துக் கொண்டது. நாடக அரசியல் திமுக வின் பரம்பரைச்சொத்து...
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
06-மார்-202119:05:43 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்அது தான் உண்மை என்று கோஸ்வாமி இடம் கைப்பற்றிய ஆதாரம் வேணும திருட்டு கூட்டமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X