பொது செய்தி

இந்தியா

பிளாட்பார்ம் டிக்கெட் உயர்த்தப்பட்டது ஏன்? ரயில்வே அதிகாரிகள் விளக்கம்

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனா காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவே, ரயில்வே ஸ்டேஷன் களில், 'பிளாட்பார்ம் டிக்கெட்' கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது' என, ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.இந்திய ரயில்வே சார்பில், குறைந்த துார ரயில்களின் பயண கட்டணம், சமீபத்தில் உயர்த்தப் பட்டது. கொரோனா காலத்தில், பயணியரின் அவசியமற்ற பயணங்களை தடுக்கவே, கட்டணம்
railway station, platform ticket, IRCTC, railway

புதுடில்லி: 'கொரோனா காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கவே, ரயில்வே ஸ்டேஷன் களில், 'பிளாட்பார்ம் டிக்கெட்' கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது' என, ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இந்திய ரயில்வே சார்பில், குறைந்த துார ரயில்களின் பயண கட்டணம், சமீபத்தில் உயர்த்தப் பட்டது. கொரோனா காலத்தில், பயணியரின் அவசியமற்ற பயணங்களை தடுக்கவே, கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக, ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில், குறிப்பிட்ட ரயில்வே ஸ்டேஷன் களில், 'பிளாட்பார்ம் டிக்கெட்' கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது, குறைந்த துார ரயில்களின் குறைந்தபட்ச கட்டணத்திற்கு நிகராக உள்ளது.


latest tamil news


இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: குறிப்பிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டும், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ரயில்வே ஸ்டேஷன்களில் அவசிய மற்று, அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே, இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
06-மார்-202122:30:10 IST Report Abuse
K.n. Dhasarathan அப்போ கொரோன முடிந்ததும் மறுபடி பிலாத் போர்ம் டிக்கட் குறையும் என்று எழுத்தில் வாக்குறுதி அளிக்க முடியமா ? நடக்கிறதே பேசுங்கய்யா? ஏற்கனவே (கான்சல் செய்த டிக்கட் விலைகளை ) கான்சலேஷன் சார்ஜ் கண்டபடி ஏற்றி, அதிலும் ஒரு ரூபாய் கூட நஷ்டம் இல்லாத நிலையிலே, சீட் டிக்கட் ரூபா அறுபது, பெர்த் டிக்கட் ரூபா நூற்றி இருபது என்று கொள்ளை அடிக்க படுகிறது, இப்போது அடுத்த கொள்ளை ஆரம்பமாகிறது, ரயில்வே கொள்ளை துறை என்று பேர் மாற்றலாம்
Rate this:
Cancel
SIRUVEERAN - chennai,இந்தியா
06-மார்-202117:27:02 IST Report Abuse
SIRUVEERAN பிளாட்போர்ம் டிக்கெட்டிற்கு பதில் டிரைன் டிக்கெட்டே வாங்கிவிடலாம்
Rate this:
Cancel
Praveen - Coimbatore,இந்தியா
06-மார்-202115:28:01 IST Report Abuse
Praveen இதே முறையை டாஸ்மாக் போன்ற மதுபான கடைகளில் செயல்படுத்தினால் சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X