சென்னை : ''தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சு நடத்துவோம்'' என ம.தி.மு.க.பொதுச் செயலர் வைகோ கூறினார்.
அவரது பேட்டி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தி.மு.க. கவுரவத்துடன் நடத்தியது. எங்கள் கட்சியினரும் தி.மு.க. வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசிவருகின்றனர்.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. வுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து தி.மு.க. வுடன் பேச்சு நடத்துவோம். கமலுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை.
ம.தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை தாயகத்தில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்திலும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.கூட்டணி குறித்து முடிவெடுக்காமல் வைகோ இன்னும் யோசித்து வருவதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

வி.சி.க்களுக்கு எந்த தொகுதி:
தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பெயர் பட்டியல் தி.மு.க. விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, சோழிங்கநல்லுார், கள்ளக்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, புவனகிரி, உளுந்துார்பேட்டை, குன்னம், மயிலாம் ஆகிய தொகுதிகளின் பெயர் பட்டியலை தி.மு.க.விடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு பொது தொகுதிகள்; 2 தனி தொகுதிகள் என ஆறு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வி.சி. கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE