திருவனந்தபுரம்: 'வெளிநாட்டு பணம் கடத்தல் தொடர்பான வழக்கில் கேரள முதல்வருக்கு தொடர்பு உள்ளதாக தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்' என கேரள உயர் நீதிமன்றத்தில் சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
20 பேர் கைது
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் உட்பட 20 பேர் கைது செய்யப் பட்டுஉள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டு பணம் கடத்தல் தொடர்பாக கேரள உயர் நீதி மன்றத்தில் சுங்கத்துறை கமிஷனர் சுமித் குமார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கு வெளிநாட்டுப் பணம் கடத்தி வரப்பட்ட வழக்கிலும் தொடர்பு உள்ளது.முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரிந்து தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தாக ஸ்வப்னா தெரிவித்து உள்ளார்.

சட்ட விரோதம்
தனக்கும் முதல்வருக்கும் இருந்த நெருக்கமான தொடர்பு பற்றியும் அதை பயன்படுத்தி சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது பற்றியும் ஸ்வப்னா தெரிவித்து உள்ளார். கேரள சபாநாயகர் மற்றும் மூன்று கேரள அமைச்சர்களுக்கும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் தொடர்பு உள்ளதாக ஸ்வப்னா தெரிவித்து உள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE