பொது செய்தி

இந்தியா

போராடும் பெண்கள்: 'டைம்' இதழ் கவுரவம்

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்களை கவுரவிக்கும் வகையில், 'டைம்' இதழின் அட்டைப் படம் அச்சிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், விவசாயிகள் நடத்தும் போராட்டம், 100 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் டைம் இதழ்,
Women, Farmers Protest, TIME magazine

புதுடில்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்களை கவுரவிக்கும் வகையில், 'டைம்' இதழின் அட்டைப் படம் அச்சிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், விவசாயிகள் நடத்தும் போராட்டம், 100 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் டைம் இதழ், விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்று உள்ள பெண்களை கவுரவப்படுத்தி உள்ளது. நாளை மறுநாள், சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது.


latest tamil news


அதை முன்னிட்டு வெளியிடப்படும், டைம் இதழின் அட்டைப் பக்கத்தில், டில்லி எல்லையில், விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தும் பெண்களின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் கீழ், 'இந்திய விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில், முன்னணியில் உள்ள பெண்கள்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பான கட்டுரைக்கு, 'என்னை யாரும் மிரட்ட முடியாது. என்னை யாராலும் விலைக்கு வாங்க முடியாது' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 'போராட்டத்தில் பெண்கள் பங்கேற்க வேண்டாம்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியும், அதை பொருட்படுத்தாமல், பெண்கள் போராட்டக் களத்தில் முகாமிட்டுள்ளது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
06-மார்-202120:17:18 IST Report Abuse
vbs manian அனாவசியமாக மூக்கை நுழைகிறது அமெரிக்கா. ஜோர்ஜ் பிளாய்டு மற்றும் போலீஸ் அடக்கு முறையில் இறந்த கறுப்பர்களின் படங்களை இந்தியா பிரசுரித்தால் சும்மா இருப்பார்களா.நமது போலீஸ் மற்றும் நிர்வாக இயந்திரம் மிகவும் பொறுமை காட்டுகிறார்கள்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
06-மார்-202117:44:30 IST Report Abuse
Endrum Indian இதெல்லாம் எல்லோருக்கும் வரும் அந்த Jealousy எனப்படும் அளவுக்கதிகமான பொறாமையால் தான் உலகெங்கும் இந்தியா இந்திய பிரதமர் மோடி இந்திய வாக்சின் என்று எங்கு பார்த்தாலும் சொல்லப்படுவதால் எங்கே இந்துக்கள் புகழ் பரவிவிடுமோ என்று மூர்க்க பாவாடை சங்கத்தினால் பணம் கொடுத்து இப்படி செய்யப்படுகின்றது. ஆம் போராட்டம் என்றால் என்ன. ஏ சி பான் வித வித உணவுகள் குளிர் மெத்தை பெரிய பெறிய வண்டியில் ஒரு வீடு போல செய்து கொண்டு இது ஏழை விவசாயி அப்படித்தானே எவ்வளவு நாளாக 101 நாளாக எதுக்கு அந்த மூணு வேளாண் சட்டம் ரத்து ஏன் அது விவசாயிகளுக்கு உதவும் வகையில் இல்லை ஏன் நன்றாக படித்தீர்களா அதெல்லாம் அவசியம் இல்லை அம்மா நீங்க விவசாயிகள் தானே உங்கள் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சினார்களா இல்லையா அதெல்லாம் உங்களுக்கு கவலை வேண்டாம் எல்லாம் நல்லபடியா நடந்து கொண்டிருக்கின்றது அப்போ நீங்க யார் நாங்க விவசாயிகள் அப்போ உங்க நிலத்தில் அதெல்லாம் அனாவசியம் 3வேளாண் சட்டம் ரத்து செய்ய வேண்டும் ஏன் அதெல்லாம் அப்படித்தான். இவர்கள் இப்போது செய்வது ஊர் சுற்றுலா காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை போராட்டம்???ஏன்டா இது போராட்டமா இல்லை???சுற்றுலாவா???பதில் இல்லை
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-மார்-202117:39:55 IST Report Abuse
J.V. Iyer பணம் கொடுத்தால் பல் இளிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X