பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடிக்கு 'செராவீக்' விருது

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி : 'செராவீக்' மாநாட்டில், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.அமெரிக்காவில், செராவீக் எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு, கடந்த, 1ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவங்கியது. நேற்று வரை நடந்த இந்த மாநாட்டில், 'செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு
CERAWeek Award, PM Modi, Modi, Narendra Modi, CERAWeek Global Energy and Environment Leadership Award

புதுடில்லி : 'செராவீக்' மாநாட்டில், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அமெரிக்காவில், செராவீக் எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு, கடந்த, 1ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவங்கியது. நேற்று வரை நடந்த இந்த மாநாட்டில், 'செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்விராய்ன்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்' எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கான விருது, நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, நேற்று வழங்கி கவுரவிக்கப்பட்டது.


latest tamil news



விருதை பெற்ற பின், பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களுமே, உலகிற்கு பெரிய சவால்களாக உள்ளன. கொள்கைகள் மற்றும் சட்டங்கள் வாயிலாக, இவற்றை எதிர்கொள்ள வேண்டும். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை, 2030ம் ஆண்டுக்குள், இந்தியா அடைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மார்-202122:46:55 IST Report Abuse
தல புராணம் பெட்ரோல் விலையை ஏத்தினதுக்கு விருது கொடுத்திருக்காய்ங்களா ??
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
06-மார்-202121:15:31 IST Report Abuse
Gnanam வாழ்த்துக்கள் இன்னும் எத்தனையோ உயரிய விருதுகள் காத்திருக்கின்றன. நற்பணி தொடரட்டும்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
06-மார்-202118:00:48 IST Report Abuse
sridhar இங்கேயும் சிலர் விருது வாங்குகிறார்களே , மகளை மணந்த மாவீரன் என்று . கேவலம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X