அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தன்னடக்கம்' தனியரசு

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
இவர், ஜாதிக்கட்சி அரசியல்வாதி. எந்த கட்சி பற்றியும் எப்பவும் கவலைப்பட மாட்டார். கொங்கு மண்டலத்தில் கொ.ம.க., - கொ.ம.தே.க., என பலரும் கவுண்டர் இனத்துக்கான கட்சி நடத்தும்போது, 'தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை'ன்னு, ஒரு கட்சி துவங்கி, 'தானுண்டு, தன் மிக்சருண்டு'ன்னு வேலை செய்வாரு.துடுக்குப் பேச்சு, வாயைத் திறந்தாலே காமெடி தான். குதர்க்கமா, கிண்டலா கேள்வி கேட்டாலும்,
தனியரசு, ஜாதிக்கட்சி, அரசியல்வாதி

இவர், ஜாதிக்கட்சி அரசியல்வாதி. எந்த கட்சி பற்றியும் எப்பவும் கவலைப்பட மாட்டார். கொங்கு மண்டலத்தில் கொ.ம.க., - கொ.ம.தே.க., என பலரும் கவுண்டர் இனத்துக்கான கட்சி நடத்தும்போது, 'தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை'ன்னு, ஒரு கட்சி துவங்கி, 'தானுண்டு, தன் மிக்சருண்டு'ன்னு வேலை செய்வாரு.

துடுக்குப் பேச்சு, வாயைத் திறந்தாலே காமெடி தான். குதர்க்கமா, கிண்டலா கேள்வி கேட்டாலும், சிரிக்கச் சிரிக்க பதில் சொல்வார்.ஜெ.,பக்கத்துல யாரும் போக முடியாத நிலையிலும், அவரிடம் இரண்டு முறை சீட்டு வாங்கி ஜெயிச்சதால், அ.தி.மு.க.,காரங்களே இவரிடம் அடக்கி வாசிப்பாங்க. ஆனாலும், 'நான் இல்லன்னா, கொங்கு மண்டலத்துல, அ.தி.மு.க., இத்தனை சீட்டு ஜெயிச்சிருக்க முடியாது' என, சொல்லும்போது ஆளுங்கட்சி ஆட்கள் பல்லைக் கடிச்சு சொல்லை அடக்கிக்கிறாங்க.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த தனியரசு, 'பொலிடிக்கல் சயின்ஸ்' எம்.ஏ., படிச்சவர். 2006 - 07ல் கொங்கு இளைஞர் பேரவைன்னு துவங்கி, 2010ல் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைனு மாத்தி, அதை கட்சியாக்கி, 'ஒன்மேன்' ஆர்மியா, இவரே தலைவர், செயலர்ன்னு ஓட்டிகிட்டு இருக்காரு. வேறு யாரையும் கட்சியில் தலைகாட்ட விட்டதில்லை. கூட்டணி தலைமையே, 'இரண்டு சீட்டு தரோம்'னு சொன்னாலும், 'ஒண்ணு போதும்ங்க'னு, மறுத்திருவாரு.


latest tamil news



கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு இருந்ததால், 2011ல் இவரை ஜெ., களம் இறக்கினார். தொகுதி சீரமைப்பால், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் (பழைய கபிலர்மலை தொகுதி) தொகுதியில் முதல் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, வென்றார். கடந்த, 2016ல் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நின்று, ஜெயித்தார். கொ.ம.க., - கொ.ம.தே.க., போன்றோரின் செல்வாக்கு வளராமல் தடுக்க ஜெ., இவரை வளர்த்துவிட்டார்.அ.தி.மு.க., சின்னத்தில் வென்றாலும், தன் கட்சி கொடி கட்டிய காரில், கரை வேட்டி, துண்டோடு, தன் ஜாதி நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.

ஆண்டுக்கு ஒரு முறை, ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் நடக்கும் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவில், பெரிய, 'மாஸ்' காட்டி, கலக்குவார்.ஜெ.,வுடன் எத்தனை நெருக்கம் காட்டினாலும், சசிகலா, தினகரன், திவாகரன் உடனும் இவருக்கு நெருக்கம் உண்டு. கூவத்துார் கூத்தில், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வைவிட, இவருக்கு வந்த, 'செல்வம்'தான் அதிகம். இருந்தாலும், 'எச்சு கையிட்டுக்கூட காக்கா ஓட்டமாட்டார்' னு கட்சிக்காரங்க சொல்லுவாங்க.

இந்த முறையும் அ.தி.மு.க.,வில், காங்கேயம், திருச்செங்கோடுன்னு கவுண்டர் அதிகம் உள்ள தொகுதியில், 'சீட்' வாங்கி நிற்க திட்டமிட்டார். சசிகலா சிறையில் இருந்து வந்ததும், அவரை சந்தித்ததால்,பழனிசாமி., - பன்னீர்செல்வம்., இவரை தள்ளி வைத்துள்ளனர். கோபத்தில் மீசையை முறுக்கியபடி, தன் அபிமான மட்டன், மீன் வறுவலை வளைச்சு அடிச்சு, எலும்பக்கூட மிச்சம் வைக்காமல் உள்ள தள்ளி தேர்தல்ல பலம் காட்ட தயாராயிட்டு வாராரு.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மார்-202113:53:20 IST Report Abuse
shanmugasundram ஈரோடு இவனுக்கு ஆப்பு உறுதி
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-மார்-202112:42:02 IST Report Abuse
Malick Raja இதற்க்கு க்ளைமாக்ஸ் .. இப்போவே துவங்கிவிட்டது .. காணாமல் போவார் இவர்
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
06-மார்-202112:33:43 IST Report Abuse
தமிழ்வேள் இவன் இந்த முறை ஜெயிக்கமாட்டான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X