அனைத்துக் கட்சிகளிடமும் கருத்து கேட்டு தான், உங்கள் கட்சி போராட்டம் நடத்துகிறதா...

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
ஐந்தாண்டு காலமாக வன்னிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வராமல், தேர்தல் ஆதாயத்திற்காக, சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில் கொண்டு வந்துள்ளனர். இந்த இட ஒதுக்கீடு குறித்து, அனைத்துக் கட்சிகளிடமும் கலந்து பேசி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.- மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்'அனைத்துக் கட்சிகளிடமும் கருத்து கேட்டு தான், உங்கள்
அனைத்துக் கட்சிகளிடமும் கருத்து கேட்டு தான், உங்கள் கட்சி போராட்டம் நடத்துகிறதா...

ஐந்தாண்டு காலமாக வன்னிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வராமல், தேர்தல் ஆதாயத்திற்காக, சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில் கொண்டு வந்துள்ளனர். இந்த இட ஒதுக்கீடு குறித்து, அனைத்துக் கட்சிகளிடமும் கலந்து பேசி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்


'அனைத்துக் கட்சிகளிடமும் கருத்து கேட்டு தான், உங்கள் கட்சி போராட்டங்களை நடத்துகிறதா; அரசுக்கு எதிராக, 'ஜிந்தாபாத்' போடுகிறதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு.



ஒவ்வொரு தேர்தலிலும், ஒவ்வொரு கட்சிக்கும் புதுப்புது சின்னங்களை ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கி, தேர்தல் நடந்தால் தான், நியாயமான போட்டியாக இருக்கும்.
- நடிகர் சரத்குமார்


'உங்கள் எண்ணப்படி உதயசூரியன், இரட்டை இலை, கை அந்தந்த கட்சிகளுக்கு இருக்கக் கூடாது என்கிறீர்கள் என்பது தெரிகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், நடிகர் சரத்குமார் பேச்சு.



உலகிலேயே பெண்கள் முன்னேற்றத்திற்காக அதிகம் செய்துள்ளது, ஜெ., தான். அவரது ஆட்சியில் தான் பெண்களுக்கு ஏராளமான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதை, முதல்வர் இ.பி.எஸ்., தொடர்ந்து வருவதால், பெண்கள் ஓட்டு எங்களுக்குத் தான்.
- தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு


latest tamil news




'எம்.ஜி.ஆர்., இருக்கும் வரை, பெண்கள் ஓட்டு, அ.தி.மு.க.,வுக்குத் தான். அதன் பிறகு மாறி விட்டது; இப்போது, பா.ஜ.,வுக்கு என கேள்வி...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு பேச்சு.



தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில், வணிகர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். வணிக சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. அத்தகைய நிலை கூடாது என பல முறை வலியுறுத்தியும், அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.
- வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலர் விக்கிரமராஜா


'வணிகர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான், அரசின் எண்ணம் என்கின்றனரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலர் விக்கிரமராஜா அறிக்கை.



சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை காக்க எவ்வித நடவடிக்கையையும், மத்திய அரசு எடுக்கவில்லை. பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்படும் இந்த அரசுக்கு, தமிழகத்தின், இ.பி.எஸ்., அரசு உறுதுணையாக இருப்பது தான் வேடிக்கையாக உள்ளது.
- தி.மு.க., - எம்.பி., சிவா


'இதை பெரும் பணக்காரர்களான, தி.மு.க., - எம்.பி.,க்கள் கூறுவது நியாயமாக இருக்குமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., சிவா பேச்சு.



கோவில்பட்டியில், உதயசூரியன் உதிக்கும் என, சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது நாள் வரை, கோவில்பட்டி தொகுதியில், தி.மு.க., வென்றதில்லை. அந்த வரலாறு மீண்டும் தொடரும் என்பதை அவருக்கு நினைவுபடுத்துகிறேன்.
- தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு


'உங்கள் சொந்த தொகுதியாயிற்றே... அதனால் தான், கோவில்பட்டியில் 'உதயசூரியன்' பதுங்கி கொள்கிறதோ...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு பேச்சு.


Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
06-மார்-202115:53:29 IST Report Abuse
Endrum Indian இந்த ஒதுக்கீடு உடனே ஒழிக்கப்படவேண்டும் அப்போது தான் தண்டங்களாக இருக்கும் மக்குகள் வெறும் ஒதுக்கீடு உபயோகித்து டாக்டர், என்ஜினீயர், ..........என்று ஆகி நாட்டையே நாசம் ஆக்கிட்டு இருக்கின்றார்கள். நான் இது வரை ஒதுக்கீடு இல்லாமல் தான் நான் படித்தேன் என் குழந்தைகளையும் படிக்க வைத்தேன் நான் M.B.C. யாக இருந்தும்.
Rate this:
Cancel
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
06-மார்-202114:14:29 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திமுக ஒதுக்கும் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. தொடர்ந்து பேசினோம், இன்று மாலை திமுக தலைவரிடம் பேசி சொல்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். வந்தால் நல்லது'' என்றார்.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
06-மார்-202112:49:10 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் ஒருவர் புறநகரில் ஏக்கர் கணக்கில் இடம் வாங்குவதற்கும், நகர்ப்பகுதியில் சென்ட் கணக்கில் இடம் வாங்குவதையும் ஒப்பிட்டால் நகர்ப்புற இடத்துக்கே மதிப்பு அதிகம். இதை ஒரு சான்றாக, வெற்றிக் கூட்டணியில் நாங்கள் பெற்றுள்ள 6 இடங்களைக் கருதலாம். இருப்பினும் கமல்ஹாசன் எங்கள் மீது காட்டிய கரிசனத்துக்கு மிக்க நன்றி"
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
06-மார்-202115:29:07 IST Report Abuse
Dr. Suriyaநல்ல ஒத்து...ஊதுறீங்க.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X