இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

Added : மார் 06, 2021
Share
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1352 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமேஸ்வரம் உதவி எஸ்.பி., தீபக் ஸ்வாச் தலைமையிலான போலீசார் வேதாளை கடற்கரை பகுதியில் சோதனையிட்டனர்.வேதாளை தெற்கு தெரு அல்லாபிச்சை தென்னந்தோப்பில் பதப்படுத்திய ரூ.20 லட்சம் மதிப்புள்ள 7 மூடைகளில் 258 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளும்,
இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1352 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமேஸ்வரம் உதவி எஸ்.பி., தீபக் ஸ்வாச் தலைமையிலான போலீசார் வேதாளை கடற்கரை பகுதியில் சோதனையிட்டனர்.வேதாளை தெற்கு தெரு அல்லாபிச்சை தென்னந்தோப்பில் பதப்படுத்திய ரூ.20 லட்சம் மதிப்புள்ள 7 மூடைகளில் 258 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளும், பத்துக்கும் மேற்பட்ட பேரல்களில் ஊற வைத்திருந்த 694 கிலோ கடல் அட்டைகள், என 952 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கடலோர காவல்படை: ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரையில் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ உயிருள்ள கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல்படை மற்றும் மெரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு பகுதிகளிலும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1352 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தியவர்களை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X