பொது செய்தி

இந்தியா

கொரோனா சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில், கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் மோடி புகைப்படத்தை நீக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.மே.வங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் அளித்த புகாரில் தேர்தல்
தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி, புகைப்படம்,

புதுடில்லி: தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில், கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் மோடி புகைப்படத்தை நீக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

மே.வங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் அளித்த புகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தடுப்பூசி திட்டங்களில் விளம்பரத்திற்காக பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsசுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் விதிகள் அடிப்படையில், பொது மக்களின் பணத்தில் விளம்பரம் செய்யக்கூடாது என தெரிவிக்கபபட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், எந்த தனி நபர் அல்லது பிரபலங்கள் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில், நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேர்தல் நடக்கும் மாநிலங்களில், கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு வழங்கப்படும் கொரோனா சான்றிதழில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்க சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
06-மார்-202118:28:21 IST Report Abuse
Darmavan இது தவறு,, பிரதமர் என்ற அரசு பொறுப்பில் அவர் படம் வெளியிடப்பட்டுள்ளது.பிஜேபி தலைவர் என்ற நிலையில் அல்ல.சுகாதார துறை மறுக்க வேண்டும்,
Rate this:
Cancel
06-மார்-202117:14:09 IST Report Abuse
ஆரூர் ரங் அப்போ அரசியல் கட்சித் தலைவர்கள் பெயருள்ள சாலை மற்றும் குடியிருப்புக்களில் வாக்குச்சாவடிகளே🤔 அமைக்கக் கூடாதே
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
06-மார்-202116:28:57 IST Report Abuse
PRAKASH.P Actually his campaign on clean India more helping us also from covid. Removing
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X