ஆமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 365 ரன்கள் எடுத்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என, முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது.முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் (60), அக்சர் படேல் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஜோடி நம்பிக்கை அளித்தது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எட்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த போது அக்சர் படேல் (43) 'ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த இஷாந்த் சர்மா (0), முகமது சிராஜ் (0), பென் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டாகினர்.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 365 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வாஷிங்டன் சுந்தர் (96) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, ஜாக் லீச் 2 விக்கெட் கைப்பற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE