பா.ஜ.,வில் இணைந்தார் தினேஷ் திரிவேதி

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: சில நாட்களுக்கு முன்னர், ராஜ்யசபாவில் தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி, இன்று பா.ஜ.,வில் இணைந்தார்.8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மே.வங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. சமீப நாட்களாக திரிணமுல் கட்சியின் எம்.பி.,க்கள், முக்கிய தலைவர்கள் பலரும் அந்த கட்சியில்
TMC MP, Dinesh Trivedi, BJP, J P Nadda, New Delhi, தினேஷ் திரிவேதி, பாஜ, பா.ஜ.,  நட்டா,  திரிணமுல்

புதுடில்லி: சில நாட்களுக்கு முன்னர், ராஜ்யசபாவில் தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி, இன்று பா.ஜ.,வில் இணைந்தார்.

8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மே.வங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. சமீப நாட்களாக திரிணமுல் கட்சியின் எம்.பி.,க்கள், முக்கிய தலைவர்கள் பலரும் அந்த கட்சியில் இருந்து வெளியேறி, பா.ஜ.,வில் ஐக்கியமாகி வருகின்றனர்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.,யாக இருந்தவர் தினேஷ் திரிவேதி. ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தார். கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததால், ஓராண்டுக்கு முன், ராஜ்யசபா எம்.பி., ஆக்கப்பட்டார். கடந்த பிப்.,12ல், ராஜ்யசபா கூட்டத்தொடரின் போது, அவையில் இருந்த தினேஷ் திரிவேதி திடீரென எழுந்து தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து அவைத்தலைவரை சந்தித்து பதவி விலகலுக்கான கடிதத்தை கொடுத்தார்.


latest tamil news



இந்நிலையில், டில்லியில் பா.ஜ., தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், தினேஷ் திரிவேதி பா.ஜ.,வில் இணைந்தார். அப்போது, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் இருந்தார்.
இதன் பின்னர் தினேஷ் திரிவேதி கூறுகையில், நான் தேர்தலில் போட்டியிட்டாலும், இல்லாவிட்டாலும் தீவிரமாக பணியாற்றுவேன். திரிணமல் காங்கிரசை மே.வங்க மக்கள் நிராகரித்து விட்டனர். மக்கள் வளர்ச்சியை விரும்புகின்றனர். ஊழல், வன்முறையை விரும்பவில்லை. உண்மையான மாற்றத்திற்கு மக்கள் தயாராக உள்ளனர். அரசியல் என்பது விளையாட்டு அல்ல. அதனை தீவிரமாக கருத வேண்டும். மம்தா, அரசியலை விளையாட்டாக கருதி, கொள்கையை மறந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மார்-202123:19:52 IST Report Abuse
தல புராணம் பாஜக கட்சி "தலைவர்கள்" சராசரி வயது 100 ஐ தாண்டிடும் போல இருக்கே..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மார்-202123:19:03 IST Report Abuse
தல புராணம் சரி உள்ளே போயி வெங்காயம் நறுக்கு.. சப்பாத்தி மாவு பிசையிற வேலைக்கு ரெண்டு வருஷம் காத்திருக்கணும்..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-மார்-202117:47:48 IST Report Abuse
J.V. Iyer மேற்கு வங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான். வாழ்த்துக்கள்.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-மார்-202111:14:00 IST Report Abuse
Malick Rajaபங்காளிகளில் பெரும்பாலோர் ஐரேமீன் சாப்பிடுபவர்கள் .. மாட்டிறைச்சி உண்பவர்கள் .. அதாவது 90% மக்கள் புலால் உணவு உண்பவர்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X