காங்.,க்கு கமல் கட்சி அழைப்பு

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
சென்னை: தங்களுடன் கூட்டணி அமைக்க காங்., வந்தால் நல்லது தான் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.ஏப்.,6 ல் நடக்க உள்ள தமிழக சட்டசபைக்கு கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் கமல் தலைமையிலான மக்கள் நீதி மையம் தலைமையில் 3வது அணி அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
காங்கிரஸ், ம.நீ.ம., மக்கள் நீதிமய்யம், மநீமை, காங், கமல், கட்சி

சென்னை: தங்களுடன் கூட்டணி அமைக்க காங்., வந்தால் நல்லது தான் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

ஏப்.,6 ல் நடக்க உள்ள தமிழக சட்டசபைக்கு கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் கமல் தலைமையிலான மக்கள் நீதி மையம் தலைமையில் 3வது அணி அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகளை ஏற்க மறுத்துள்ள காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலர் சி.டி. குமாரவேல் கூறுகையில், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க முன்வந்தால் நல்லதுதான். காங்கிரசுடன் வெவ்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


கமலுடன் ஆலோசனை


இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுடன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐஜேகே கட்சியின் ரவி பச்சமுத்து ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


latest tamil news


இதன் பின்னர் சரத்குமார், ரவி பச்சமுத்து நிருபர்களிடம் கூறுகையில், நாளைக்குள் சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், ஐஜேகே கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
07-மார்-202110:40:11 IST Report Abuse
Sridhar ராவுல் லின் கட்சி என்பதால் அவ்வளவு இளக்காரமா? என்னதான் அவர் கட்சியை கேவலப்படுத்தி சிறுமைப்படுத்தியிருந்தாலும், அதுக்காக, மதிமுக, நாம் தமிழர் மாதிரி கட்சியெல்லாம் நாளைக்கு கூட்டணிக்கு அழைத்தால், இந்திரா காந்தியால், அவ்வளவு பாடுபட்டு 1969 லிருந்து வளர்க்கப்பட்ட கட்சிக்கு கொஞ்சம் களங்கம் அல்லவா? ஒருவரைமுறை வேண்டாமா?
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
07-மார்-202100:31:34 IST Report Abuse
BALU ஊழல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிய கமலுக்கு காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் தெரியவில்லையா?? அல்லது காங்கிரஸும் கமலும் கிறித்துவ அடிப்படைவாதிகள் என்ற கொள்கையின் அடிப்படையில் அழைக்கிறாரா???
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
06-மார்-202123:34:07 IST Report Abuse
PRAKASH.P Why..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X