அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு

Updated : மார் 07, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (35+ 70)
Share
Advertisement
சென்னை :நீண்ட இழுபறிக்குப் பின், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி சின்னத்தில் போட்டி என்ற முடிவை கைவிட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என, ம.தி.மு.க., அறிவித்துள்ளது. காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பி, ம.தி.மு.க.,
 தி.மு.க., ம.தி.மு.க., சம்மதம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட்

சென்னை :நீண்ட இழுபறிக்குப் பின், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி சின்னத்தில் போட்டி என்ற முடிவை கைவிட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என, ம.தி.மு.க., அறிவித்துள்ளது. காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பி, ம.தி.மு.க., 12 தொகுதிகள் கேட்டது. தனி சின்னம் என்றால், வெறும் நான்கு தொகுதிகள் தான் கிடைக்கும் என்றும், அதுவே உதயசூரியனில் போட்டி என்றால், ஆறு தொகுதிகள் தரப்படும் என்றும், தி.மு.க., குழு திட்டவட்டமாக தெரிவித்தது.

இதையடுத்து, ஆறு தொகுதிகளை பெறுவதற்காக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, ம.தி.மு.க., முன்வந்தது. சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையிலான குழுவும், வைகோ தலைமையிலான குழுவும், நேற்று நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. ம.தி.மு.க.,வுக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்க, தி.மு.க., சம்மதம் தெரிவித்தது.இதற்கான ஒப்பந்தத்தில், ஸ்டாலின், வைகோ கையெழுத்திட்டனர்.

ஸ்டாலினிடம் பணிந்தார், வைகோ

பின், நிருபர்களிடம், வைகோ கூறியதாவது: 'ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன்' என, கருணாநிதியிடம், ஏற்கனவே உறுதி அளித்திருந்தேன். திராவிட இயக்கத்தை பாதுகாக்கவே, தி.மு.க., ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். தனிச் சின்னத்தில் போட்டியிட, ஒரு கட்சிக்கு, 12 தொகுதிகள் தேவை. ஓட்டு சேகரிக்க, குறைந்த நாட்கள் உள்ளதால், ஆறு தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில், ம.தி.மு.க., போட்டியிடும்.இவ்வாறு, வைகோ கூறினார்.


இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழுக் கூட்டம், நேற்று மாலை, சென்னையில் நடந்தது. அதில், 'தி.மு.க.,விடம் கடைசி வரை போராடி, 7 தொகுதிகளாவது பெற வேண்டும்' என தீர்மானிக்கப்பட்டது. அந்த தகவலை, தி.மு.க., தலைமைக்கு தெரிவித்து, அழைப்புக்காக காத்திருந்தது. ஆனால், தி.மு.க., தரப்பில் இருந்து, அழைப்பு வரவில்லை.

திருச்சியில், 'விடியலுக்கான முழக்கம்' எனும் தலைப்பில், தி.மு.க., தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறுவதால், இன்றும் அழைப்பு வர வாய்ப்பில்லை. நாளை, மீண்டும் தி.மு.க., குழுவிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுக்கள் பேச்சு நடத்த உள்ளன. அதன்பின், உடன்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (35+ 70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
07-மார்-202122:17:43 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தமிழக வாக்காளர்கள் முதலில் அழிவு சக்திகளை புறக்கணிக்க வேண்டும் 2011 இல் திமுகவை புறக்கணித்தீர்கள் இப்பொழுது மீண்டும் எதற்கு அது ? அது திருந்தி விட்டது என்று 100% நிச்சயமாக சொல்ல முடியுமா ? பத்து வருடமாக அதிகாரத்தில் இல்லாமல் செலவு செய்து வரும் கட்சி ஆட்சியில் இருந்த பொழுதே வாக்களித்த உங்களுக்கு சேவை செய்ய மனமில்லாமல் கஜானாவை காலி செய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் உங்கள் கால் பிடித்து சேவையா செய்வார்கள் ? விழித்துக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் பேராபத்து ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Rate this:
Cancel
RAJAN - murasori,இந்தியா
07-மார்-202121:16:06 IST Report Abuse
RAJAN பாவாடைஸ் ஒன்னு சேர்வதில் என்ன தப்பு கண்டீர் ஹிந்து அடிமைகளே? உங்கள் ஓட்டு எப்போதும் போல தீயமுகவுக்கு போட்டுட்டு போவீங்களா? வந்துட்டானுங்க
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
07-மார்-202119:59:57 IST Report Abuse
மலரின் மகள் அடுத்த கட்சியை விட கூடுதலாக ஒரு சீட்டாவது பெற்று விடவேண்டும் அதுவே வெற்றி என்று எண்ணுமளவுக்கு கூட்டணி காட்சிகள் உள்ளனவா. கூட்டணிக்கட்சிகள் தங்களுக்கென்று தனியாக சின்னம் வேண்டாம் நாங்களும் சூரியனிலேயே போட்டியிடுகிறோம் என்று இணைந்து கொண்டார்கள். இனி எதற்கு தனியாக ஆலுவலகம். உறுப்பினர் அட்டை. திமுகவின் உறுப்பினர் அட்டையில் கொஞ்சம் பெற்று அதை தங்கள் தொண்டர்களுக்கு தந்துவிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X