அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சியில் தமிழகம் பல படிகள் வளர்ச்சி பெற்றது'

Updated : மார் 08, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை: 'அண்ணாதுரை, கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், தமிழகம் படிப்படியாக பல படிகள் வளர்ச்சி பெற்றது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: இந்திய பொதுத்தேர்தல் ஜனநாயக வரலாற்றில், முதன் முறையாக, ஒரு மாநிலக் கட்சி, சட்டசபையில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த, அரிய சாதனையைப் படைத்தவர் அண்ணாதுரை. அவர் முதல்வராகவும், கருணாநிதி உள்ளிட்டோர்
திமுக, தி.மு.க., தமிழகம், கருணாநிதி, ஸ்டாலின், மு.க.ஸ்டாலின்,

சென்னை: 'அண்ணாதுரை, கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், தமிழகம் படிப்படியாக பல படிகள் வளர்ச்சி பெற்றது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: இந்திய பொதுத்தேர்தல் ஜனநாயக வரலாற்றில், முதன் முறையாக, ஒரு மாநிலக் கட்சி, சட்டசபையில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த, அரிய சாதனையைப் படைத்தவர் அண்ணாதுரை. அவர் முதல்வராகவும், கருணாநிதி உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும், தமிழில் பதவி ஏற்பு நிகழ்வை நடத்தி, உளமார உறுதி மொழி கூறிப் பொறுப்பேற்ற நாள் 6.3.1967. அன்று நிகழ்ந்த அந்த மகத்தான மாற்றத்திற்கான நிகழ்வின் தொடர்ச்சியாகத்தான், 'தமிழ்நாடு' என்ற நமக்கே உரிமை உடைய பொருத்தப் பெயர் அமைந்தது.

மாநில உரிமைகள் மக்களிடையே, பேசு பொருளாகி, வலிமை பெற்றன. அதைத் தொடர்ந்து, கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், தமிழகம் படிப்படியாகப் பல படிகள் வளர்ச்சி பெற்றன. தமிழர்கள் முன்னெப்போதும், இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டனர்.

பார் வியந்த அந்த வளர்ச்சியை கடந்த, 10 ஆண்டு காலமாக பின்னுக்குத் தள்ளி, நிர்வாகச் சீர்கேடுகளாலும், ஊழல் முறைகேடுகளாலும், மோசமான நிலையை உருவாக்கி உள்ளனர்.
மாநில உரிமைகளையும் அடமானம் வைத்துள்ள அ.தி.மு.க., ஆட்சியாளர்களை விரட்டியடித்து, அண்ணாத்துரை, கருணாநிதி வழியில் தி.மு.க., ஆட்சி அமைய, தொண்டர்கள் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றுச் சூளுரைப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
07-மார்-202123:34:38 IST Report Abuse
C.SRIRAM இவர் குடும்பமும் கட்சியினரும் தான் வளர்ச்சி பெற்றனர் . தமிழ் நாடு தளர்ச்சி தான் பெற்றது
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
07-மார்-202123:27:11 IST Report Abuse
unmaitamil இருண்ட தமிழகம் வேண்டாம் .... அதனால் திமுக வேண்டவே வேண்டாம் போடா ...
Rate this:
Cancel
07-மார்-202122:50:23 IST Report Abuse
kulandhai Kannan பிறகு ஏன் திமுக, பத்து சட்டமன்ற தேர்தல்களில் ஏழில் தோற்றதாம்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X