தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

ரசிகர்களை ரஜினி ஏமாற்றியது ஏன்?

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அர்ஜுன மூர்த்தி. ரஜினி துவங்க இருந்த கட்சியில் முக்கிய பொறுப்பு இவருக்கு தரப்பட்டது. ஆனால், கட்சி துவங்கும் முடிவை ரஜினி கைவிட்டதால் பொறுப்பு கைகூடவில்லை. என்றாலும், உடனடியாக 'இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி' என, புதிய கட்சியை பதிவு செய்தார். அவருடன் ஒரு சந்திப்பு.இ.ம.மு.க.,வுக்கு ரஜினி ஆதரவு உண்டா?ஆதரவு என சொல்ல
 ரசிகர்,ரஜினி,அர்ஜுன மூர்த்தி

ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அர்ஜுன மூர்த்தி. ரஜினி துவங்க இருந்த கட்சியில் முக்கிய பொறுப்பு இவருக்கு தரப்பட்டது. ஆனால், கட்சி துவங்கும் முடிவை ரஜினி கைவிட்டதால் பொறுப்பு கைகூடவில்லை. என்றாலும், உடனடியாக 'இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி' என, புதிய கட்சியை பதிவு செய்தார். அவருடன் ஒரு சந்திப்பு.


இ.ம.மு.க.,வுக்கு ரஜினி ஆதரவு உண்டா?ஆதரவு என சொல்ல முடியாது; அவரது மனதில் எனக்கு இடமுண்டு.


எத்தனை உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்?சின்ன சின்ன கட்சிகள் இணைந்து வருகின்றன. மலர்களாக அடுக்காமல், மாலையாக தொடுத்து வருகிறோம். 'ஆன்லைன்' வழியாக உறுப்பினர்கள் சேர்கின்றனர்.


ரஜினி ரசிகர்கள் சேர்கிறார்களா?ஆறு, ஏழு மாவட்ட நிர்வாகிகள் பேசி வருகின்றனர்; சந்தித்து சென்றுள்ளனர். அவர்களுக்கு, 20, 30 ஆண்டுகளாக சமூக சேவை மூலம் மக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அன்றே, 65 ஆயிரம் பூத் கமிட்டிகளில், 45 ஆயிரம் உறுப்பினர்கள் தயாராக இருந்தனர். அனைவரும் வருவார்களா என, தெரியாது. என் தலைமை, எங்கள் கொள்கையை ஏற்பவர்கள் வரலாம்.


latest tamil news

இந்த தேர்தலில், இ.ம.மு.க., போட்டியிடுமா?ஆமாம்; கட்சியின் ரோபோ சின்னம் ஏற்கனவே பிரபலமாகி வருகிறது.


குறுகிய காலத்தில் தேர்தல் வெற்றி சாத்தியமா?சாத்தியம் இல்லை தான். ஆனால் நம்மையும் மீறி எல்லாமே வேகமாய் நடக்கிறது. இந்த, 60 நாட்களும் எனக்கு, 60 திருப்பங்களை தந்துள்ளன.


மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து செயல்படுவீர்களா?அந்த எண்ணம் இல்லை.


ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி தமிழருவி மணியன் இ.ம.மு.க.,வுக்கு வருகிறாரா?அவர் சிந்தனையும், என் சிந்தனையும் வேறு, வேறு.


ரஜினி அண்ணன் சத்யநாராயண ராவ், உங்களுக்கு ஆதரவு தெரிவித்தாரா?அவரை நான் பார்த்ததே இல்லை..


ரஜினியின் பிம்பமாக செயல்படுவீர்களா?ரஜினியின் பிம்பம், 40 ஆண்டுகளாக ஒவ்வொரு நிமிடமாக உருவானது. அதோடு ஒப்பிடவே யாரும் இல்லை.


'அர்ஜுன மூர்த்தி கிடைத்தது, நான் செய்த பாக்கியம்' என்று உங்களை புகழ்ந்தார் ரஜினி. உங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்கலாமே?கேட்கலாம். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவருடைய புகழை கெடுக்கும் விதமாக, எதுவும் செய்ய மாட்டேன்.


'கட்சி துவங்கினால், அதன் தலைவராக இருக்க மாட்டேன்' என்றவர், ரஜினி. எனவே, உங்கள் வழியாக கட்சி துவங்கி இருக்கிறாரோ?எதையும் அவர் நேரடியாக சொல்லி விடுவார். 'பினாமி' வேலையெல்லாம் பண்ண மாட்டார்.


கட்சி துவங்காமல், ரசிகர்களை ரஜினி ஏமாற்றியது ஏன்?கொரோனா தொற்று பரவல், உடல் நலம் காரணமாக, கட்சி துவங்கவில்லை என சொல்லி விட்டார். அந்த, மூன்று பக்க அறிக்கையில் உள்ளதை தவிர வேறு சிந்தனை அவருக்கு கிடையாது.


உங்கள் கட்சி சின்னமான ரோபோ, சமூக ஊடகம் வழியாகத்தான் பிரசாரம் செய்யுமா?வேட்பாளருடன் ரோபோவும், வீதி வீதியாக சென்று மக்களிடம் ஓட்டு கேட்கும்.


தேர்தல் வேலை செய்ய உங்கள் கட்சியில் தொண்டர்கள் இருப்பதாக தெரியவில்லையே?தொண்டர்கள் தேவையில்லை. உறுப்பினர்கள் போதும்.ரஜினி போன்று, சசிகலாவும் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டாரே?அவரும் நன்றாக யோசித்து சரியான முடிவை எடுத்திருக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
07-மார்-202122:17:54 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தமிழக வாக்காளர்கள் முதலில் அழிவு சக்திகளை புறக்கணிக்க வேண்டும் 2011 இல் திமுகவை புறக்கணித்தீர்கள் இப்பொழுது மீண்டும் எதற்கு அது ? அது திருந்தி விட்டது என்று 100% நிச்சயமாக சொல்ல முடியுமா ? பத்து வருடமாக அதிகாரத்தில் இல்லாமல் செலவு செய்து வரும் கட்சி ஆட்சியில் இருந்த பொழுதே வாக்களித்த உங்களுக்கு சேவை செய்ய மனமில்லாமல் கஜானாவை காலி செய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் உங்கள் கால் பிடித்து சேவையா செய்வார்கள் ? விழித்துக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் பேராபத்து ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
07-மார்-202118:22:18 IST Report Abuse
திராவிஷ கிருமி உண்மையில் ரஜினி யாரையும் ஏமாற்றவில்லை... தமிழக மக்கள் தான் மீண்டும் மீண்டும் ஒவ்வொருவராக எதிர்பார்த்து, நம்பி நம்பி ஏமாந்துகொண்டே இருக்கின்றனர்...
Rate this:
karutthu - nainital,இந்தியா
07-மார்-202119:46:30 IST Report Abuse
karutthuபால்ஸ் ஹோப் குடுத்தது ரஜினி தானே..... இதில் தமிழருவி மணியன் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார்...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-மார்-202117:21:30 IST Report Abuse
J.V. Iyer திமுகவின் அழுத்தம் மகள், மாப்பிள்ளை மூலமாக வந்தால் ரஜனி என்ன செய்வார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X