பொது செய்தி

இந்தியா

உத்தரகண்ட் பனிப்பாறை சரிவுக்கு காரணம் என்ன?: ஆய்வில் தகவல்

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: 'உத்தரகண்ட் மாநிலத்தில், சமீபத்தில் பனிப்பாறை உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கு, திடீர் மழை மற்றும் கடந்த, 40 ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரித்ததே காரணம்' என, ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.திடீர் வெள்ளப் பெருக்கு உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சமேலியில், சமீபத்தில், பனிப் பாறை

புதுடில்லி: 'உத்தரகண்ட் மாநிலத்தில், சமீபத்தில் பனிப்பாறை உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கு, திடீர் மழை மற்றும் கடந்த, 40 ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரித்ததே காரணம்' என, ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.latest tamil news

திடீர் வெள்ளப் பெருக்கு


உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள சமேலியில், சமீபத்தில், பனிப் பாறை உடைந்து, திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதுவரை, 72 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 132 பேரைக் காணவில்லை.

இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்துள்ள, அண்டை நாடான நேபாளத்தின் காத்மாண்டுவை தலைமையிடமாக வைத்து செயல்படும், சர்வதேச ஒருங்கிணைந்த மலைப்பகுதி மேம்பாட்டு மையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உத்தரகண்ட் மாநிலம் சமேலி பிராந்தியத்தில், கடந்த மாதம் பலத்த மழை பெய்துள்ளது. மேலும், இந்த பிராந்தியத்தில், கடந்த, 40 ஆண்டுகளில் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.அதனால், இங்குள்ள மலைப் பகுதியில் உள்ள பனிப் பாறையில் திடீரென பிளவு ஏற்பட்டுள்ளது.


latest tamil news

1.6 கி.மீ., உயரம்


மேலும், 1.6 கி.மீ., உயரத்தில் இருந்து, அந்தப் பனிப் பாறை சரியத் துவங்கியது. வழியில் இருந்த பனிப் பாறைகள் உள்ளிட்டவற்றை அடித்து வந்துள்ளது.வழியில் இருந்த சிறிய குளங்கள், குட்டைகளில் இருந்த நீரும், அதனுடன் சேர்ந்துள்ளது. இதனாலேயே, திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
07-மார்-202109:04:16 IST Report Abuse
Perumal We have super genius like nallavan,arur .Why not they become advisors (Half baked).
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
07-மார்-202107:23:23 IST Report Abuse
Darmavan நேபாளம் சீனாவின் கைப்பாவை அதிலிருந்து வரும் செய்தி சந்தேகத்துக்குரியது கொரோன போல.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மார்-202106:02:40 IST Report Abuse
தல புராணம் நேரு தான் காரணம் என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டம்..
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
07-மார்-202108:32:36 IST Report Abuse
Nallavan Nallavanகிண்டலு ? அதைவிட முக்கியமான, சீரியஸான விஷயம் என்னன்னா இதை ஆய்வு செய்தது அண்டை நாடான நேபாளின் ஒரு அமைப்பு ........ நம்ம கிட்டே இது மாதிரி ஆய்வு செய்ய வசதி, கட்டமைப்பு, தொழில்நுட்பம் இல்லையா என்று நீ கேட்டிருந்தால் புத்திசாலி ...............
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
07-மார்-202111:11:36 IST Report Abuse
Ramesh Mநல்லவேளை மோடி தான் காரணம் என சொல்லவில்லை....
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்ஆகவே பனிப்பாறை உடைந்ததற்கு காரணமான மோடி உடனே பதவி விலகவேண்டுமென்று பப்பு கண்டன தீர்மானம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X