பொது செய்தி

இந்தியா

தனி கல்வி வாரியம் டில்லி அரசு ஒப்புதல்

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : டில்லிக்கு என, தனி, பள்ளி கல்வி வாரியம் அமைக்க, டில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது,டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இங்கு, 1,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளும், 1,700க்கும்அதிகமான தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகள் அனைத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன்

புதுடில்லி : டில்லிக்கு என, தனி, பள்ளி கல்வி வாரியம் அமைக்க, டில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது,டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.



latest tamil news



இங்கு, 1,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளும், 1,700க்கும்அதிகமான தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகள் அனைத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.டில்லிக்கு என, தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்க, முதல்வர் கெஜ்ரிவால் விரும்பினார். இந்நிலையில், டில்லி அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. இதில், டில்லிக்கு, தனி கல்வி வாரியத்தை, வரும் கல்வியாண்டுமுதல் அமைக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது.


latest tamil news



இது குறித்து, முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லியில், வரும் கல்வியாண்டு முதல், தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்படும். இதில், 2,025 பள்ளிகள் இணைக்கப்படும். தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்பட்டால், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
07-மார்-202108:52:33 IST Report Abuse
GMM மத்திய கல்வி வாரியம் இருக்கும் போது டெல்லிக்கு தனி கல்வி வாரியம் எதற்கு? பள்ளிகளின் முதல்வர் கருத்து என்ன? பெற்றோர்கள் கருத்து என்ன? சட்டப்படி முதல்வருக்கு அதிகாரம் உள்ளதா? இரட்டை நிர்வாக செலவு தேவையா? டெல்லி முதல்வரிடம் நிர்வாக திறமை இல்லை. கெஜ்ரிவால் போராட்ட விபத்தில் சிக்கி முதல்வர் ஆனவர்.
Rate this:
Steel - bangalore,இந்தியா
07-மார்-202112:48:45 IST Report Abuse
Steelஎழுவது சீட்டுகளில் அருவத்திரெண்டு வென்றவர் போராட்ட விபத்தில் முதல்வர் ஆனவரா. இந்தியாவிலேயே பெஸ்ட் ஸ்கூல் என அரசு ஸ்கூல் பெயர் வாங்கியிருக்கு. நீர் என்ன தனியார் பள்ளி நடத்துவரா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X